பக்கம் எண் :

18ஏழைகள்

கிறேன். அதுவரைக்கும் பல்லைக் கடித்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான். ”

என்று சொல்லி, “அடே அப்பா, நீ வெளியிற் போக வேண்டியிருந்தால் முகத்தைக் கழுவி, நெற்றி நிறைய நாமம் போட்டுக் கொண்டு போ. அப்போதுதான் பட்டினி முகம் தெரியாது” என்று வற்புறுத்தினார்.

பிறகு கோவிந்தன் நெற்றி நிறைய நாமமிட்டு வெளியில் வந்தார். என்னைக் கண்டு திடுக்கிட்டு, இந்நேரம் நீர் இங்கு தானா இருந்தீர் என்று கேட்டார். தமது வீட்டின் நிலை எனக்குத் தெரிந்து விடுவதில் அவருக்கு விருப்பம் இராதது சகஜம். நான் இப்போதுதான் வந்து கொண்டிருக்கிறேன் என்று, இரண்டு தடவை அழுத்திச் சொன்னேன்.

வெயிற் காலத்தில் நானும், அவரும் சாப்பிட்டவுடன் மூன்று மைல் தூரத்திலுள்ள காத்தான் பங்களாவுக்குப் போவது வழக்கம். புறப்பட்டோம்.

வழியில் சுயமரியாதை-சமதர்மம் இவற்றைப் பற்றிய வாதம், என் நண்பரின் முரட்டு மறுப்பு, எனது திகைப்பு, கொஞ்சம் மவுனம் இவற்றைத் தாண்டியதும் இன்றைய உலக நிலையின் ஒரு துளியை நாங்கள் பருக நேர்ந்தது.

வயற்புறத்திலிருந்த களிப்பு மண்ணையெல்லாம் ஒரு புறத்திற் குவித்துக் கொண்டிருந்தனர் சில தொழிலாளர். சேர்த்த மண்ணில் கிணற்று ஜலத்தை மொண்டு மொண்டு ஊற்றிச் சேறாக்கிக் கொண்டிருந்தனர் மற்றும் சிலர். அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் பதப்படுத்திய சேற்றைக் கட்டில் கொண்டு கற்கள் அறுத்துக் கொண்டிருந்தனர் வேறு சிலர். பதப்படுத்திய சேற்றுக் குவியலண்டையில் சில ஏழைத்தொழிலாளர் குனிந்து, முதுகைப் பலகைபோல் காட்ட அம்முதுகில் நிறையக் களிமண்ணை ஏற்றிக் கல்லறுக்கும் இடத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர் இன்னும் சில தோழர். நல்ல வெயிலுக்கிடையில் மணி 2 ஆயிற்று. மரத்து நிழலில் கஞ்சிக் கலயத் தோடு காத்திருந்த இவர்களின் பெண்டிர்களில் ஒருத்தி