பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்19

வீட்டிற் கைப்பிள்ளையைப் போட்டுவிட்டு வந்தேன் என்று கதறினாள். வயிற்றில் பசித்தீ எரிந்து கொண்டிருக்கும் விஷயம் அப்போதுதான் அத்தொழிலாளர்கட்கு ஞாபகம் வந்தது. உள்ளங்கைகளை மாத்திரம் ஒருவாறு சுத்தம் செய்து கொண்டு கஞ்சி குடிக்கத் தாவினார்கள். அவர்கள் தேகத்திலிருந்து வடிந்த வியர்வை நீரைவிடக் குறைந்த எடையுள்ள அந்தக் கஞ்சி கலந்த நீரையுண்டு அவர்கள் திருப்தி அடைய வேண்டியிருந்தது.

என் நண்பர் கோவிந்தன் இக்காட்சியை உருக்கமாகவே நோக்கினார்.

நான்-இந்த ஆபீஸ் எத்தனை மணிக்குக் கலையும் என்பது உமக்குத் தெரியுமா?

இந்தக் கேள்விக்கு அடியில் வருவதெல்லாம் என் நண்பருடைய பதில் : “ஆம். 6-30 மணி வரைக்கும் இவர்கள் வேலை செய்தாக வேண்டும். காலை 7 மணிக்கு இவ்வேலை துவக்கப்பட்டது. மாலையில் அவர் கூலி 6 அணாதான். நாளைக்கு இந்த வேலையும் அவர்கட்குக் கிடைக்காமற் போக லாம். கிடைக்காவிடிற் பெண்டுபிள்ளைகள் சகிதம் பட்டினி தான். இவர்கட்கு வீட்டு வசதியோ, சுகாதார வசதியோ, பஞ்சம் இவ்வளவும் உண்மை. இது பற்றி நீர் என்ன சொல்ல வருகிறீர்?”

“பொது நன்மையை முதலாளிகள் வசப்படுத்திக் கொண்டதுதானே இவர்களின் இவ்விதத் துன்பத்திற்குக் காரணம்” என்று நான் கேட்டேன்.

நண்பர் : - இவர்கட்குத் துன்பமா? அதோ பாரும் அவர்களின் சந்தோஷ ஆரவாரம்!

உண்மையில் அவர்கள் தமக்குள் மாமன், மைத்துனன் முறை கூறிச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆயினும் அவர்களின் உள்ளத்தின் அடித்தளம்?... இதை என் நண்பருக்கு எவ்வாறு காட்ட முடியும்.