நடை ஓடவில்லை. வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை. இது மாத்திரமன்று. ஓர் வரப்பை விட்டு இறங்கும்போது அவர் விழுந்ததற்குக் காரணத்தையும் அவர் என்னிடம் மறைத்துச் சொல்லி மழுப்பினார். நாங்கள் பங்களாவை அடையும்முன், பங்களாவில் எமக்கு இடம் அகப்படாது என்று தெரிந்துவிட்டது. வேலை நிறுத்தம் செய்த ஆலைத் தொழிலாளர் பங்களாவில் நிறையக் கூடியிருப்பதை வழியிற் கேள்விப்பட்டோம். எனது நண்பர் எதிரில், எனக்கும் நகரத்திற் சென்று சில்லரை வேலை செய்து விட்டு வீடு திரும்பும் சில ஏழைத்தோழர்களுக்கும் கீழ்வரும் சம்பாஷணை நடந்தது. நான் : - | இன்றைக்கு நீங்கள் தலைக்கு என்ன சம்பாதித்தீர்கள்? | | | ஏழைகள் : - | 4 அணா வீதம் சம்பாதித்தோம். | | | நான் : - | உங்கட்குக் காலுக்குச் செருப்பிலையா? குடை யில்லையா? உங்கள் சரீரம் இளைத்துப் போகக் காரணமென்ன? நீங்கள் நோய் நொடியின்றி வாழ முடிகிறதா? உங்கள் வாஸஸ்தலம் எப்படிப்பட்டது. |
அந்தோ நண்பரே பார்த்தீரா! கடவுளும், கடவுள் மக்களை முன்னேற்றுவிக்கச் செய்த மதமும், அந்த மதம் கற்பித்த மூட எண்ணங்களும் மக்களை ஏற ஆசைப்படவும் விடாது குறுக்கிடுகின்றன என்றேன். என் நண்பருக்கு இந்த வார்த்தையில் ஒன்றும் காதில் விழவில்லை. அவர் மார்பு வலிக்கிறது, மார்பு வலிக்கிறது என்று அலறினார். உஷ்ணம் அதிகப்பட்டால் தமக்கு மார்புவலி வந்துவிடும் என்றும் நலிந்து கூறினார். கோவிந்தனைக் கையில் அணைத்தபடி தேறுதல் கூறிப் பங்களாவுக்குள் ஓர் அறையிற் சேர்த்தேன். கோவிந்தனுக்குச் செய்ய வேண்டிய சிகிச்சையென்ன? உணவு தரவேண்டியதைத் தவிர வேறொன்றுமில்லை என்பது தான் என் எண்ணம். அதற்காகத்தான் ஓடினேன். மாலைப்போது மணி நான்கும் ஆகிவிட்டது. |