பக்கம் எண் :

26ஏழைகள்

ஆளவந்தார்கள் ஐந்தாண்டுத் திட்டம் போடுகிறார்கள். ஆயிரம் கோடி செலவிடப் போகிறோம் என்று காரில் திரிவதன் வாயிலாகவே அத்தொகையைச் செலவிட்டு வருகிறார்கள்.

வானக்கூரையைச் சிறிது தாழ்த்தப் போகிறார்களாம். வையத்தைச் சிறிது உயர்த்தப் போகிறார்களாம். கடலைப் பெரிதாக்கப் போகிறார்களாம். மலையைக் குள்ளமாக்கப் போகிறார்களாம். பயனுள்ள வேலையாக இருக்கலாம். படிப்போர்க்கு வகுப்புக்கள் நிறைய ஏற்பாடு செய்ய வேண்டுமா இல்லையா?

இன்றியமையாத வேலை எது?

இன்று கோடிக்கணக்காக உள்ள தமிழ் மாணவர்களின் நிலை என்ன? கண்ணீருடன் கம்பலையுமாகத் திரிகின்றார்களே வகுப்பு வாங்கித் தரும்படி. அவர்கட்கு வசதி செய்து தரும் வேலைதான் அரசினர்க்கும்’ ஆளவந்தார்க்கும் முதல் வேலை.

(குயில், 8-6-1958)