பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்27

3
தாசி வீட்டில் ஆசீர்வாதம்


“கதவு தட்டப்படுகிறது! நான் போய்ப் பார்க்கிறேன். நீ சாமியிடம் பேசிக்கொண்டிரு” என்று சொல்லித் தாய்க்கிழவி வந்து தெருக்கதவைத் திறந்து ‘யார்?’ என்றாள். வந்த இருவரில் ஒருவனாகிய சொக்கன், ‘நாங்களிருவரும் புதுச்சேரி; வேண்டிய பணம் கொடுக்கிறோம். தங்கிப் போகவேண்டும்’ என்றான். கிழவி இதோ வருகிறேன் என்று உள்ளேபோய்த் தன் மகளோடு பேசியிருந்த சாமியை ‘சப்-இன்ஸ்பெக்டர் வந்திருக்கிறார். நீங்கள் மறைந்து கொள்ளுங்கள்’ என்றாள். சுவாமி மறைந்து கொண்டார். பிறகு சொக்கனும் சுந்தரனும் உள்ளே அழைக்கவும் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். தாய்க்கிழவி இருவரிடமும் ‘என் தம்பி பின்புறம் இருக்கிறான்; மெல்லப் பேசுங்கள்’ என்றாள்.

தாசி :

நீங்கள் எந்த ஊர்?

  

சொக்கன் :

நாங்கள் புதுச்சேரி. இந்தவூர்த் தம்பிரான் சாமியிடம் ஆசீர்வாதம் பெறவந்தோம். நாங்கள் வியாபாரம் துவக்குமுன் தம்பிரான் சுவாமியிடம் ஆசிபெற வேண்டும் என்று எங்கள் தகப்பன்மார்கள் கட்டாயப்படுத்தினார்கள்.