சுந்தரன் : | (இடையில்) அந்தத்தடியனைச் சேவிக்குமுன் உன்னைச் சேவிக்க வந்தோம். இதைக் கேட்டதும் தாசி வாய் பொத்தி உரக்கப் பேசாதீர்கள் என்றாள். இப்படி இவள் சொன்னதை பொதுவாகத் தம்பிரான்மார்களைத் தூஷிக்கலாகாது அது பாவம் என்று சொன்னதுபோல் நினைத்து அந்தப் பாவத்திற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று தாசிக்குத் தெரியப்படுத்த எண்ணிச் சுந்தரன் (உரத்த குரலில்) அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். அவனை எங்கள் எதிரில் கொண்டு வந்து நிறுத்து! (அப்போது கூடச் சொல்லுவோம் என்று அர்த்தம்) |
உள்ளே தம்பிரான் சுவாமி நடுங்குகிறார்! இப்போதே இந்த சப்-இன்ஸ்பெக்டர்களை என்ன என்று கேட்டு, நம்மீது ஏதாவது கேஸ் இருந்தால் பணம் கொடுக்கிறதாய்ச் சொல்லிக் கட்டுப்படுத்தலாம் என்று நினைத்துச் சொக்கன் சுந்தரன் இருவர் முன்வந்து நின்றார். நின்றவர் சும்மா இராமல் மங்கலாய் எரிந்த லைட்டைத் திருகி நான்தான் தம்பிரான் என்றார். தாய்க்கிழவி : | சுவாமி ! தங்களிடந்தான் ஆசீர்வாதம் பெறவந்திருக்கிறார்கள். | | | தாசி : | வாலிபர்களே! இவரே நீங்கள் ஆசிபெற வந்த சுவாமிகள்! |
|