அன்று இரவு உடுக்கை பம்பை சகிதம் பூசனை செய்தார். தங்கத்தின்மீது ஆவேசம் வந்தது. இந்தப் பூங்கிளையில் வந்து, ஆடுகிறது யார்? என்று பூசாரி கேட்டார். விலாசம் தெரிந்தது. அந்த மாரியாத்தாள்தான். என் அண்ணணை-அவன் மறந்தாண்டா? (அவன் என்பது தங்கத்தின் புருஷன்) தளியல் போடு! தளியல் போடு! -மாரி மலை ஏறினாள். தங்கமும் அவள் புருஷனும் சனிக்கிழமைக்கு ஆக வேண்டிய சாமான்கள் அனைத்தும் வாங்கி வைத்திருந்தார்கள். 20 பேர் பண்டாரங்கட்குச் சாப்பாடு போடுவதாய்க் காலை 10 மணிக்கெல்லாம் வரச் சொல்லியிருந்தார்கள். வீதியிலிருந்த பெரிய மனுஷிகள், “போகட்டும் தங்கம் தனிக்கட்டை அவள் கண்டிருக்கும் கனவைப் பார்த்தால் அடுத்த வருஷம் அவள் பிள்ளை பெறுவாள்” என்று சொல்லிச் சாப்பாட்டிற்கு வருவதாய் ஒத்துக் கொண்டார்கள். அமளி குமளியாய்ச் சனிக்கிழமை வந்தது. அதிகாலை 5 மணி. வேலைக்காரிகளும் வேலைக்காரர்களும் சொல்லிவைத்தபடி வந்து கதவைத் தட்டினார்கள். தங்கம் திறக்கவில்லை. புருஷன் : | என்ன தங்கம்! எங்கே இருக்கிறாய்! இங்கு வா! இன்றைக்குத்தானா தெருவில் சாணம் போட மறந்து போவது. வேலை அதிகம் கிடக்கிறது. | | | தங்கம் : | ஹு ங்ஹு ம்..........வீட்டுக்குப் போகக் கூடாது. |
|