பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்33

அவர்களுக்கு வேலை கிடைத்துவிட்டால், தன் தொண்டர்களின் தொகை குறைந்துபோகக் கூடுமாதலினால், என்னப்பன் நாளுக்கு நாள் தன் தொண்டர்களை அதிகப்படுத்திக்கொண்டு போவான் போலும்.

அப்பன் அருள் அப்படியிருக்க, ஆஸ்திகர் மானமுள்ள செயல்தான் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

நான் மூக்கின்மேல் விரலை வைத்து யோசித்தேன். ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். அதாவது :

ஆஸ்திகர்களுக்கும் கடவுளுக்கும், பேச்சு வார்த்தை யுண்டு. ஆஸ்திகர் செயலெல்லாம் கடவுள்செயலே ஆஸ்திகர் ஏற்பாடெல்லாம் கடவுள் ஏற்பாடே! ஆகையால் ஆஸ்திகர் அனைவரும் கூடிய சீக்கிரத்தில் மற்றத் துறைகளில் அவர்கள் நடந்து கொள்வதையடுத்து, இந்தக் கூத்தாண்டவன் விழா மூலம் உலக மக்களில் பெண்மணிகளை நாயினும், பட்டி மாடுகளினும் கேவலமாக்கிப் போட்டு, ஆண்களையெல்லாம் கூத்தாண்டவர் தொண்டர்களாக்கிவிடத் திட்டம் போட்டிருக்கிறார்கள்! ஆண்தகைமையை எதிர்பார்க்கும் நாட்டில் ஆண்பிள்ளைகளைப் பேடிகளாக்கும் கூத்தாண்டவர், ஒழிவது என்றோ? அவர்கள் வாழ்க!

ஏ. சி. - 3