பக்கம் எண் :

34ஏழைகள்

6
தேரை விட்டுக் கீழே குதித்தான்
சல்லியராஜன்
மோரை விட்டுக் கூழைக் கரைத்தான்.


‘மொட்டை முருகன் தெருக் கூத்தாடி. அவன் ராஜா வேஷங்கட்டி ஒரு பாட்டுப்பாடி, கரகரவென்று சுற்றிப் பழயபடி தன் சிம்மாசனமாக அமைந்திருக்கும் குந்தாணியின்மேல் உட்கார்ந்தால் அடடா என்னமாயிருக்கும்! ’ என்று தெருக்கூத்துப் பிரியர்கள் பேசிக் கொள்வார்கள்.

காடைக் கிராமத்தில் ஒரு நாள் தெருக்கூத்து நடந்தது. மொட்டை முருகன் சல்லிய ராஜாவாக வேஷம் கட்டப்போகிறான் என்று அண்டைக் கிராமத்துச் சனங்கள் அதிகமாய் வந்து கூடிவிட்டார்கள்! உள்ளூர்வாசிகள் மாலையிலேயே படுக்கையும் வெற்றிலைப் பாக்கு, சுண்ணாம்புப் பல்லாய்களும் கையோடு எடுத்துக்கொண்டு முன்னிடம் தேடிக் கொண்டார்கள்.

சல்லியராசா வேஷம் வரும் சமயம் வந்தது. சனங்கள் எதிர்பார்த்த வண்ணம் இருந்தார்கள். வேஷம் கட்ட நேரம் ஆகிறதால் இடையில் கட்டியக்காரன் வேஷம் வந்தது. பிறுகு சல்லிய ராசா வந்தார். ஜனங்களுக்குப்