பிடிக்கவில்லை. என்ன காரணமென்றால், மொட்டை முருகன் சல்லிய ராஜா வேஷம் கட்டவில்லை. வேறு ஒருவன் அந்த வேஷம் கட்டிவந்தான். ஜனங்கள் வருத்தப்பட்டார்கள். உடனே கட்டியக்காரன் இதையறிந்து சனங்களுக்கு மொட்டை முருகன் இப்போது வரத்தோதுப்படாது சல்லியன் சண்டை போடும்போதுதான், அந்த மொட்டை முருகன் அந்த வேஷம் கட்டமுடியும் என்றான். பிறகு சல்லியன் சண்டைநேரம் வந்தது. மொட்டை முருகனைப் பார்க்க ஆவலாக இருந்தனர் ஜனங்கள். இந்தச் சமயத்தில் வேஷம் கட்டுகிற இடத்தில் நடந்தது என்னவெனில், ஒருவன் மொட்டை முருகனைப் பார்த்து ‘என்னடா மொட்டை! உன்னை எவ்வளவு சனங்கள் எதிர்பார்க்கிறார்கள். மெதுவாக எழுந்திரு! வேஷம் கட்டிக்கொள்! ’ என்றான். இன்னொருவன், ‘என்னதான் கள்ளைக் குடித்தாலும் இப்படியா? நான்கூட இப்போது குடித்துவிட்டுத்தான் இருக்கிறேன். எழுந்திரு ஏ மொட்டை! ’ மொட்டை மெதுவாக ஏழுந்தான். வேஷம் கட்டியாய் விட்டது. இன்னொரு பழங்குடியன், ‘மொட்டைக்கு அதிக மயக்கமா யிருக்கிறது; மோர் இருந்தால் கொண்டு வந்து, கூழ் இருந்தால் கொண்டு வந்து அதனோடு கரைத்துக் கொடுத்தால் மயக்கமும் தீரும், உடம்புக்கும் தெம்பு (பலம்) உண்டாகும்’ என்றான். உடனே மோருக்கும் கூழுக்கும் ஆளனுப்பப்பட்டது. ஆயினும் மொட்டை முருகன் அதற்குள் வேஷம் கட்டிக்கொண்டு சபையில் வந்து “தேரை விட்டுக் கீழே குதித்தான். ” என்னும் பாட்டின் இந்த முதல் வரியைச் சொல்லிக் கொண்டு தேரிலிருந்து கீழே குதிக்கும் பாவனையாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்தில் திடீரென்று குதித்தான் (சல்லிய வேஷம் கட்டிய மொட்டை முருகன்). |