சுதேசமித்திரன் அபிப்பிராயப்படி பார்ப்பனரை நிமிர்த்திப் பார்ப்பனரல்லாதாரைத் தரைமட்டமாக்குவது பார்ப்பனர் ஒவ்வொருவருக்கும் முழுநோக்கமாதலால், ஏற்கனவே கனம் சி. பி. ரா. அவர்கள் மெம்பர் பதவியடைந்ததை கனம் சி. பி. ரா. தியாகம் பண்ணுகிறார் என்று சுதேசமித்திரன் சொல்லிற்று. சாரதா சட்டத்தை ஒழித்து விட முடியுமா? சு. ம. இயக்கத்தை ஒழிக்க முடியுமா? நம் பார்ப்பனருக்கு ஏதாவது வேலை பார்த்துக் கொடுக்கிறீர்களா? என்பது கேள்வி. ‘பார்ப்போம், வேலை உறுதியாகட்டும்’ என்பது பதில். |