இதற்குள் தங்கமாச்சாமி : | நீதான் வாங்கிக் கொள்ளேண்டி! என்றது. |
| |
மொட்டைச்சாமி : | வேண்டுமென்றே அந்தக் கிழவி ‘என்னிடம் அத்தனை பெரிய கற்பூரக் கட்டியைக் கொளுத்திக் கொடுக்கப் பார்க்கிறாள்! ’ என்றது. |
| |
தங்கமாச்சாமி : | நீ ஒரு முண்டம்! சொன்னதென்ன? நீ செய்கிறதென்ன? என்று, முன் தாங்கள் முடிவு செய்திருந்ததைக் குறிப்பிட்டுத் திட்டிற்று. |
| |
கிழவி : | பிடி, திருப்பழத்தை! |
| |
மொட்டை : | முதலில் திருப்பழத்தைக் கொடு! பிறகு கற்பூரத்தைக் கொடு! பெரிய மனுஷிகள் சிரித்தார்கள்! |
| |
கிழவி : | இரண்டும் ஒன்றுதானே! |
| |
மொட்டை : | “ஓகோ! என்னையா ஏமாற்றப் பார்க்கின்றாய்? என்று சொல்லி, அங்கு வைத்திருந்த வாழைப்பழச்சீப்பை எடுத்துக்கொண்டு, கொளுத்திய கற்பூரத்தை ஊதி வாயில் போட்டுக்கொண்டு மலையேறிற்று. மீதி ஆறு சாமிக்கும் இது பிடிக்கவில்லை. ஆறுசாமியும் ஒரே வாக்காய், “கேட்க வேண்டியதை உடனே கேளுங்கள்! நாங்களும் மலையேற வேண்டும்! ” என்றன! |
| |
ஒரு கேள்வி : | பிள்ளை பிறக்குமா? |
| |
பதில் : | ஆண்பிள்ளை பிறக்கும். |
| |
இன்னொரு கேள்வி : | பையனுக்கு உத்தியோகம் கிடைக்குமா? |
| |
பதில் : | அடுத்த மாதத்தில் 100 ரூ உத்தியோகம். |
| |
இன்னொரு கேள்வி : | கணவர் பிழைப்பாரா? |
| |
பதில் : | இன்னும் 8 நாட்களில் வேலைக்குப் போவார். |
| |
வேறொரு கேள்வி : | அந்தக் கிழவர் (கேட்பவளின் தங்கையின் புருஷன்) வெகுநாட்களாய்ப் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறாரே? |