பதில் : | அவர் செத்துவிடுவார் பயப்படாதே! |
| |
அதன் தொடர்ச்சி கேள்வி : | என் தமக்கை தாலியிழந்து கஷ்டப்படுவாளே? |
| |
பதில் : | அவள் தாலி இழக்கமாட்டாள்! நேரம் ஆய்விட்டது. சரி சரி, இனி முடியாது. மீதி ஆறு சாமிகளும், திருப்பழம் வாங்காமல் மலையேறி விட்டன! தெளிந்தாப் போல் எழுந்தன! மொட்டையிடம் சில வாழைப்பழங்களே மீதி! ஏழு சிறுமிகளும், தனியாய்ப் போய் விட்டார்கள். வாழைப்பழ விஷயம் நடந்தது. |
| |
இதன் சாரம் : | இந்த சாமிகளைப்பற்றி அதிகமாய்ப் புகழ்ந்து, பெரிய மனுஷிகள் பேசிக்கொண்டு போனார்கள். கிழவி கிண்டல் துவக்க இடமில்லை. சாமியைப் பற்றிக் குறைசொன்னால், 100 ரூபாய் உத்தியோகத்தில் அமரப்போகும் பையனின் தாய்க்குக் கோபம் வருமா? வராதா? நமது நாட்டுப் பெண்டிர்களின் பேதைமையை என்ன என்றுதான் சொல்லுவது? |
| |
மற்றொன்று : | இப்படிப்பட்ட சாமியைக் கண்டு இவ்வாறு எண்ணத்தையும் பணத்தையும் பறிகொடுக்கும் பேதைப் பெண் மக்கள் மட்டில், சற்றாவது இரக்கம் வைத்து எப்போதாவது-எந்த இடத்திலாவது-எந்த ரூபத்திலாவது-ஒருமுறை அந்த உண்மைச்சாமி வந்து போகக் கூடாதா? |