பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்43

8
திருந்திய ராமாயணம்


பால காண்டம்.
(டெலிபோன் படலம்)

மே. த. தசரதன் அழைப்பிற்கிணங்கித் தன் அந்தரங்க ஆலோசனை மண்டபத்திற்குச் சுமந்திரன் என்னும் மந்திரியும், வசிஷ்டன் என்னும் பாதிரியும், சில பிரபுக்களும், போலீஸ் தலைவரும், மிலிட்டரி தலைவரும் வந்து சேர்ந்தனர். பத்திரிகைப் பிரதிநிதிகள் உள்ளே விடப்படவில்லை. மே. த. தசரதன் தன் வாயிலிருந்த உக்காவை எடுத்தார். இக்கூட்டம் உத்தியோக தோரணையில் கூட்டப்பட்டதல்ல. எனது பிற்காலத்தில் இந்நாட்டில் நாம் செய்ய இருக்கும் வேலை மிக்க கஷ்டமானதுதான். ஆயினும் செய்து முடிப்போம் என்று கங்கணம் கட்டுவோம் என்று சொல்லி முடித்தார். (கரகோஷம்) பிறகு பாதிரி ஒரு திருத்தம் கொண்டு வந்து பேசியதாவது : பரதன் கைகேசி மந்தரை ஆக்ஷேபிக்காவிட்டால் சரிதான் என்று மந்திரி சொல்லுகிறார். ஆக்ஷேபிப்பதானால் எத்தனை நாட்களுக்குள் அவர்கள் ஆட்க்ஷேபனை மனுப் போடவேண்டும்? (மூன்று நாளைக்குள் என்ற பதில்) இப்படி