பக்கம் எண் :

44ஏழைகள்

யிருக்கையில் நாம் வீணாக உள்நாட்டுத் தந்திகளை ஏன் தணிக்கை செய்ய வேண்டும்? வேண்டியதில்லை. நாம் அவசரமாகப் பட்டாபிஷேக ஏற்பாடு செய்ய வேண்டியதிருக்கிறது. டெலிபோன் தந்தி முதலியவை இல்லாவிட்டால் நமக்குத்தானே கஷ்டம். ஆகையால் அயல் நாடுகள் சம்பந்தப்பட்ட கப்பல், ஏரோப்ளேன், தந்தி முதலிய அனைத்தும் நிறுத்தி விடுவோம். ஆனால் ஒன்று! அந்நிய நாட்டு ஸ்தானீகர் தங்கள் தங்கள் நாடுகளுக்குப் பட்டாபிஷேகத் தகவல்களை அறிவிக்க முரட்டுத்தனம் செய்வார்கள். அவர்கள் முரட்டுத்தனம் நம்மை என்ன செய்யும்? மற்றபடி சர்வதேச சங்கஸ்தானிகர் தந்தியை மாத்திரம் அனுமதிப்போம். அதனால் பாதகமில்லை. (இவ்விஷயம் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது) கடைசியாய் மேன்மை தங்கிய தசரதன் எழுந்து அன்பர்களே! பாதிரியாரே! இத்தேசத்தின் அதிகாரப் பதிவுகள் அனைத்தும் உங்கள் கையில் அடங்கியுள்ளன. நீங்கள் பிரஸ்தாப விஷயத்தைத் திறம்படி முடிக்க நினைத்தால் உங்களால் முடியாமற் போகாது. எதிர்காலத்தில் தமிழரின் இந்தியாவை ஆரியர் ஆட்சிக்கு உட்படுத்துவதில் உங்கட்கு விருப்ப மிருந்தால் ராமனுக்கே பட்டம் சூட்டுங்கள் என்றார். அவ்வாறே! அவ்வாறே! என்று அனைவரும் சொன்னார்கள். பிறகு சிற்றுண்டி-பானம் நடந்தது. வெளியிற் போகுமுன் கார் டிரைவர்கட்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அனைவரும் எழுந்தனர். போலீஸ் அதிகாரி எதையோ பார்த்து ஆச்சரியப்பட்டு இதென்ன என்று கேட்டார், அங்கு ஓர் சுவரில் சில புனல்களும் அந்தப் புனல்களிலிருந்து டெலிபோன் கம்பிகளும் பொருத்தப்பட்டிருந்தன. அனைவரும் ஆச்சரியப்பட்டு இதென்ன நாம் இங்குப் பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் யாரோ தமது இருப்பிடத்திலிருந்தேயறிய இவ்விதம் முன்னமே சூழ்ச்சி செய்துள்ளார்கள் போலும்! என்று திகைத்தனர். இதைக் கேட்ட சக்கரவர்த்தி, அப்படி ஒன்றுமிராது. நமது ராமன்தான் செய்திருப்பான் என்றனர். மற்றவர் இதை விசாரியுங்கள் என்று சொல்லித் தமது கால்பூட்ஸ்