பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்45

சத்தம் பிறருக்குக் கேட்காதிருக்க மெதுவாய் நடந்து கார்களில் ஏறிச் சென்றார்கள். சக்கரவர்த்தி அரண்மனையின் உட்புற வழியாகக் கைகேசியின் மாளிகை யடைந்தார். கைகேசி பாத்ரூமில் (குளிக்கும் தனியறை) இருப்பதாய்த் தெரிந்தது. பாத்ரூமை நோக்கி நடந்தார். பாத்ரூமானது வட்ட வடிவமாய் அமைந்து சுற்றிலும் நான்கு வாயிலுடையதாயிருந்தது. வாயிற்கதவுகளெல்லாம் மூடப்பட்டிருந்தன. ஒரு வாயிலின் வெளிப்புறத்தில் திரு ராமனை, மே. த. சக்ரவர்த்தி சந்தித்தார். அவர் நெஞ்சம் துடித்தது. திடுக்கிட்டு ராமா ஏன் இங்கு வந்தாய்? என்று கேட்டார். சிற்றன்னையிடம் ராமன் வந்தாய்ச் சொன்னான். பாத்ரூமில்தானா சந்திக்க எண்ணினாய் என்று தசரதர் கேட்டார்இது விக்ஷயத்தில் தாங்கள் அதிகமாய்க் கவனிக்கலாமா என்று ராமன் சொன்னான். தசரதர் பரிதாபமாய் ராமா என்மீது உண்மையான ஆசை உனக்கு இல்லைபோலும்! அவளைச் சிற்றன்னை யென்றும் நினைக்கலாகாதா? என்றார். ராமனுக்குச் கோபம்! கைகேசி உமக்கு மனைவியென்பதும், நான் உமக்குப் பிள்ளையென்பதும், எனக்குக் கைகேசி சிற்றன்னையென்பதும் ஆசிரியர் முறைப்படி உண்மையாயினும் உலக நியாயப்படி பார்த்தால் ஆக்ஷேபிக்கக் கூடியவை. இதற்குள் மந்தரை அங்கு வந்தாள். தசரதருக்கு வணக்கம் செய்தாள். தசரதர் அவளைக் கடுப்போடு பார்த்தார். தகாத சந்தர்ப்பத்தில் தான் வந்தது அபசாரம் என்று சொல்லித் தனக்கு மன்னிப்புக் கேட்டாள் மந்தரை. தசரதர் மன்னிப்பதாய்க் கூறி மந்தரையை வெளியே போகச் சொன்னார். மந்தரை பதில் கூறுகிறாள் : தந்தையாரும் மூத்த மகனாரும், ஏக காலத்தில் எனது தலைவியை எதிர்பார்க்கிறீர்கள். உள்ளிருக்கும் தலைவிக்கோ உங்கள் வருகை தெரியாது. நான் தலைவியைக் கண்டு உங்கள் வரவைத் தெரிவிக்க விரும்புகிறேன். கைகேசி! என்று உரத்த சத்தமிட்டாள்! அந்தரங்க ஆலோசனை மண்டபத்தில் இன்னும் என்ன சூழ்ச்சி வார்த்தை நடக்கிறதென்பது கவனிக்கிறேன் என்று கைகேசி உள்ளிருந்தபடி பதில் சொன்னாள்.