பக்கம் எண் :

46ஏழைகள்

தசரதர் திடுக்கிட்டு ‘ஓ மந்தரை! இதென்ன ஆச்சரியம்! ’ என்றார். மந்தரை கூறுகிறாள். தங்களுடைய அந்தரங்க ஆலோசனை மண்டபத்தில் ஒலி பெருக்கும் கருவியும் அவ்வொலியைப் பாத்ரூமில் கொண்டுவரக் கூடிய டெலிபோனும் புதிதாக நான் ஏற்பாடு செய்தேன். அங்கு ஏதோ சபை கூடிப் பேசுவதாய் நான் கேள்விப்பட்டேன். உடனே அதைக் கவனியென்று என் வீட்டிலிருந்து டெலிபோன் மூலம் என் தலைவிக்குத் தெரிவித்திருந்தேன். அதைத் தலைவி கேட்டுக்கொண்டிருக்கிறதாய்த் தெரிகிறது. ‘கைகேசி! இதோ உனது நாதரும் மகனாரும் வந்திருக்கிறார்கள். வெளியில் வா’ வென்று மந்தரை கூச்சலிட்டாள்.

தசரதர் தமது உடைவாளைத் தடவினார். மந்தரையைக் கண்ணால் எரிக்கவும் நினைத்தார். தம் பல்லைப் பல்லாலேயே மென்று தின்றார். ராமனுக்கு விஷயம் புரியலிவில்லை. மேலும் தசரதர் மந்தரையை அப்படியே வாரித்தரையில் மோதத் தாவினார். மந்தரை, ஜாக்ரதை என்ற ஒரு வார்த்தை சொல்லித் தன் இடையிலிருந்த ரிவால்வாரையெடுத்து நீட்டினாள். கைகேசி வெளியில் வந்து தசரதனையும் ராமனையும் சீறினாள்.

கேகய நாட்டில் நடந்துள்ள உடன்படிக்கைப்படி இந்நாட்டுக்குரியவன் பரதனே! எனக்குள்ள இரண்டு அதிகாரங்களில் ஒன்றின்படி நீ பதினான்கு வருஷம் காட்டுக்குப் போயிருக்க வேண்டும். மற்றோர் அதிகாரத்தை மீதியாக- வைத்திருக்கிறேன் என்று இடிபோல் பேசிச் சர்வ தேசங்கத் திற்குத் தந்தியும் எழுதி மந்தரையிடம் கொடுத்தாள்.

தசரதர் :

(பரிதாபத்துடன்) கைகேசி! நான் இங்கே விழுந்து உயிர்விடுகிறேன்.

  

மந்தரை :

சக்கரவர்த்தியாரே, வேண்டாம் வேண்டாம், மெதுவாக அந்தபுரத்திற்குச் சென்று அங்குள்ள சோபாவிலுட்கார்ந்து உயிர்விடுங்கள்!