பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்47

ராமன் :

பரதன் என்னைத்தானே பட்டங் கட்டிக் கொள்ளச் சொல்லுவான்.

  

கைகேசி :

மெய்தான். நன்றாக ஞாபகப்படுத்தினாய். எனது மற்றோர் அதிகாரத்தால் சீதையையும் நீ உடன் கூட்டிப்போக உத்தரவிடுகிறேன். என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள் அல்லது இவ்விரு தமிழ்ப்பெண்களை எதிர்த்துப் பாருங்கள்.

  

மந்தரை :

ராமா நீதான் அதிர்ஷ்டசாலி. இப்போதுதான் உனது சீதை உனக்குக் கிடைத்தாள்.

ராமன், சீதை, லக்ஷு மணன் சகிதம்காடு சென்றான். இதில் ராமனுக்கு ஒரு வகையில் சந்தோஷமே.

டெலிபோன் படலம் முற்றிற்று.

மந்தரை திருவடிகளே சரணம்.