பக்கம் எண் :

48ஏழைகள்

9
சுயமரியாதைக்காரருக்கு
அமெரிக்கன் கடிதம்


அமெரிக்கா, 2-11-30

திருமிகு, சுயமரியாதைக்காரர், எஸ். ஆர். வி. அவர்கட்கு வந்தனம்.

நான் என் சொந்த முயற்சியில், தமிழ் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். தென்னிந்தியாவிலுள்ள என் நண்பர்கள், எனக்கு அங்கு நடைபெறும்தமிழ்ப் பத்திரிக்கைகளை அனுப்பி வருகிறார்கள். நான் ஒர் உயர்தர வைத்தியனாயிருப்பதோடு, உலக மக்கள் ஒற்றுமையுற்று முன்னேற்றம் அடைய வேண்டுமென்ற கவலையும் உடையவன். தங்கள் பத்திரிக்கையை நான் வாசித்ததில்-இந்தியாவில் ‘இந்து’ என்ற ஓர் வகையாருக்கு ஏற்பட்டிருக்கும் நெற்றிக் குறிகளை அகற்றுவதில் அநேகப் பெரியார்கட்குக் கவலையிருந்து வருவதாய் அறிந்தேன். நெற்றிக்குறிகளை அகற்ற என்னால் முடியும். இக்குறிகளை அகற்றினால்தான் மனிதரில் பேதம் நீங்கும் என்று, நீங்கள் மிகுதியும் உழைத்து வருவதை நான் பாராட்டு கின்றேன். தக்க உபகரணங்களுடன், நான் இந்தியாவுக்கு