வர உத்தேசம். வரும் செலவு என்னுடையது. அனுப்பும் செலவு தங்களுடையது. உடனே தந்தி மூலம் பதில் தேவை. தங்கள், கே. ஆர். பதில் தந்தி புதுவை 10. 12. ’30 கனம் டாக்டர், கே. ஆர். , அமெரிக்கா. உடனே தக்க உபகரணங்களுடன் புறப்பட்டு வரவும். தக்க சன்மானம் நீங்கள் பெறுவீர்கள். எங்கள் நன்றியறிதலும், தங்கட்கு எந்நாளும் உரியதாகும். எஸ். ஆர். வி. அமெரிக்கர் தந்தி சுயமரியாதைக்காரர், எஸ். ஆர். வி. வேண்டிய கருவிகள் சகிதம், நான் புறப்பட்டு விட்டேன். பிரான்ஸ்சுக்கு நேரே போகின்றேன். அங்குச் சில கருவிகளை ஏற்பாடு செய்துகொண்டு, 5. 3. ’31-ல் புதுவை துறைமுகத்தில் இறங்குவேன். துறைமுகத்தில் என்னை வரவேற்பீர்கள் என்று நம்புகின்றேன். தங்கள், கே. ஆர். 5. 3. ’31 காலை 7 மணிக்குப் புதுவைக் கடற்கரைப் பாலத்தில் எள் விழ இடமில்லாதபடி ஜனக்கூட்டம் சேர்ந்திருந்தது. எஸ். ஆர். வி. அவர்களும் மற்றும் சுயமரியாதைக்காரர் சகிதம் அமெரிக்கர் வரவுக்குக் காத்திருந்தனர் அநேக வெள்ளையர்கள் கப்பலிலிருந்து புதுவைத் துறைமுகத்திற்கு இறங்கிய வண்ணம் இருந்தனர். ஆனால் அமெரிக்க டாக்டர் கே. ஆர். அவர்கள் கையில் பெரிய பெட்டியுடன் திடீரென்று கூட்டத் ஏ. சி. -4 |