பக்கம் எண் :

50ஏழைகள்

தின் எதிரில் தோன்றி, ‘நான்தான் கே. ஆர். ’ என்றார். உடனே கே. ஆர். அவர்களை அங்கு போடப்பட்ட பெஞ்சியின் மீது ஏற்றி கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்தார்கள். எஸ். ஆர். வி. வரவேற்புப் பத்திரம் வாசித்தார்.

டாக்டர் கே. ஆர். வரவேற்புக்கு பதில் சொல்லியதாவது : நண்பர்களே ‘உங்கள் சார்பில் நமது எஸ். ஆர். வி. கோரிக்கையின்படி வந்திருக்கின்றேன். என்னை அன்புடன் வரவேற்ற உங்கட்கு என் நன்றியுரியது. உங்களில் சிலருக்கு நெற்றியில் குறியேற்பட்டிருப்பதையும், அதை நீக்க முயன்றும் முடியாமலிருப்பதையும் அறிந்து வருந்தினேன். ஏதோ எனக்குள்ள வைத்திய ஞானத்தால், அக்குறிகளை நீக்கிச் சொஸ்தப்படுத்த முன்வந்தேன். நெற்றியில் ஏற்பட்டிருக்கும் குறிகள் தோலை மாத்திரம் பற்றியதா? அல்லது நெற்றியின் எலும்பையும் பற்றியதா? என்பதை நான் முதலில் ஆராய வேண்டும். ’

(‘இல்லை இல்லை’ என்று கூச்சல்)

‘அப்படியானால் சரி; அதன்பிறகு அந்தக் குறிகளை அறுத்தபின், அறுத்த இடத்தில் ஏற்படும் இரணத்தைச் சுலபமாக ஆற வகைதேட வேண்டும்.

(‘இல்லை இல்லை’ என்று கூச்சல்)

‘அப்படியானால் சரி. முதலாவதாக நான் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், நெற்றிக்குறியுடைய மக்கள் பிறக்கும்போது அக்குறிகள் எவ்வளவு நீளம், எவ்வளவு அகலமாய் இருக்கின்றன. அதன்பிறகு எப்போது அதில் கலர்கள் ஏற்படுகின்றன என்பதேயாகும்.

(‘இல்லை இல்லை’ என்று கூச்சல்)

‘அப்படியானால் சரி. இதற்காக நான் ஏராளமான உபகரணங்களுடன் வந்துள்ளளேன். உள்ளூரில் உள்ள சில