பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்51

டாக்டர்களையும் என்னுடன் இருக்கும்படி ஏற்பாடு செய்யுங்கள். அக்குறிகளை ஆப்ரேசன் செய்யும் மாதிரியையும், அறுத்தபின் ஒளஷதங்களை உபயோகிக்க வேண்டிய மாதிரிகளையும் அவர்கட்குக் கற்றுகொடுத்து விடுகிறேன். என் வேலையும் சீக்கிரம் முடிந்துவிடும். ’

(‘இல்லை இல்லை’ என்று கூச்சல்)

‘அப்படியானால் சரி. நான் மாத்திரம் எல்லாருடைய நெற்றிக் குறிகளையும் அறுத்துச் சொஸ்தப்படுத்தி விடுகின்றேன்.

(ஜனங்கள் ஆரவாரச் சிரிப்பு)

இதற்கிடையில் ஆஸ்திகர் ஒருவர் எதிர் வந்து, ‘ஐயா, அமெரிக்கரே! நெற்றிக் குறிகள் என்றால் இன்னதென்றே நீங்கள் தெரிந்துகொள்ளாமல், பாபம், அமெரிக்காவிலிருந்து இங்கு வந்திருக்கின்றீர்கள்! அதிலும் உங்களைப் பார்த்தால் அமெரிக்கராய்த் தோன்றவில்லை. அங்கு கறுப்பு மனிதர் இருப்பதாய்க் கேள்வி. அந்த இனத்தைச் சேர்ந்தவர் என்று ஒருவாறு நினைக்கின்றேன். அன்றியும்,

இதைக் கேளும்; கடவுளின் ஏற்பாடுதான் மதங்கள் மதங்களின் ஏற்பாடுதான் நெற்றிக்குறிகள். ஒரு மதத்தினர் ஒருவகைக் குறிகளை இடுவதுண்டு. மற்றொரு மதத்தினர் மற்றொரு வகைக் குறிகளை இடுவதுண்டு. ஒன்றின் பெயர் நாமம். மற்றொன்று திருநீறு. இவை தினம் தினம் அவர்களாலேயே தங்கள் தங்கள் நெற்றியில் நாமக்கட்டியிலும் பசுச்சாணியின் பஸ்மத்தாலும் இடப்படுகின்றன. இவைகளை ஆப்ரேஷன் செய்ய நீர் கத்திப் பெட்டியும், மருந்து வகைகளும் கொண்டுவந்து விட்டீரே. உம் அறிவு ஒரு பக்கமிருந்தாலும், உம்மை அழைத்த சுயமரியாதைக்காரரின் அறிவு மிகவும் மெச்சத்தக்கது. அந்த அறிவை பொருட்காட்சி