பக்கம் எண் :

52ஏழைகள்

சாலையில்தான் கொண்டுபோய் வைக்க வேண்டும். ’[இதற்கிடையில் சில சுயமரியாதைக்காரர்கள், ‘அதிகமாய்ப் பேச வேண்டாம்’என்று கூச்சலிட்டனர். ஆஸ்திகர் சிலர், ‘உங்கள் யோக்யதை தெரிகிறது : அதிகமாய்ப் பேசினால் என்ன?’ என்று கேட்டனர். ]

இதற்குள் சு. ம. எஸ். ஆர். வி. ஏதோ சொல்லக் கருதிக் கையமர்த்தினார். (‘வெட்கம்! வெட்கம்’! என்ற கூச்சல்; பெருத்த ஆரவாரம்)எஸ். ஆர். வி. பேச முடியவில்லை. அதன்பிறகு டாக்டர் கே. ஆர். அவர்கள் ஆசனத்தில் ஏறி, ‘நண்பர்களே! உங்களைச் சில கேள்விகளைக் கேட்க எண்ணுகின்றேன். தயவுசெய்து அக்கேள்விகளைக் கேட்கும்படி எனக்கு அனுமதி தரவேண்டும்’ என்று வேண்டிக் கொண்டார். கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. டாக்டர் கே. ஆர். சொல்லுகிறார்................

‘கடவுள் மனிதர்களை உண்டாக்கினார் என்றும், அந்த மனிதர் வயிற்றில் பிறக்கும் மனிதர்களையும் அவர்தான் உண்டாக்கினார் என்றும் ஒப்புக்கொள்கிறீர்களா?’

(‘ஆம்; ஒப்புக்கொள்கிறோம்’ என்ற கூச்சல்)

‘சரி, அதுவுமில்லாமல், மதங்கள் மனிதருக்கு இன்றியமையாதவை என்று கடவுள்கள் அம்மதங்களை ஏற்படுத்தியதாகவும் அதனால் மனிதர்கள் எல்லாம் மதத்திற்கு அப்புறப்பட்டிருக்கலாகாதென்று அக்கடவுள்களே எண்ணியதாகவும் நீங்கள் நம்புகிறீர்களா?’

(‘ஆம்’ என்ற கூச்சல்)

‘ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் வயிற்றில் பிறக்கும் மற்றொருவனும், அந்த மதத்தையுடையவனாகவே பிறக்கிறான் என்பதை நம்புகிறீர்களா?’