பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்61

9
பண்டிதர்க்குப் பாடம்


சுப்பிரமணியன் இங்கிலீஷ் படிக்கிறான். ஆனால் அவன் தமிழிலும் தேர்ச்சியடைய வேண்டும் என்பது அவன் தகப்பனார் எண்ணம். இதற்காகப் பண்டிதர் ஒருவரிடம் மாலைப் போதில் சுப்பிரமணியனைத் தமிழ்ப்பாடம் கேட்க அனுப்பி வருவது வழக்கம். ஒருநாள் மாலை 8 மணி வரைக்கும் சுப்பிரமணியன் பண்டிதர் வீட்டிலிருந்து வராததால் சுப்பிர மணியன் பாட்டி அவனைத் தேடிக் கொண்டு பண்டிதர் வீட்டுக்கு வந்தாள். அப்போது சுப்பிரமணியனுக்கும் பண்டிதர்க்கும் சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது.

சுப்பிரமணி :

ஆனால், நீங்கள் தண்ணீர்க்குழாய் ஒன்று தங்கள் வீட்டு மெத்தையில் வைத்துக் கொள்ளலாம்.

  

பண்டிதர் :

வீட்டுமெத்தையில் தண்ணீர்க்குழாய் வைத்தால் கீழிலிருந்து தண்ணீர் குழாய்க்கு ஏறுமா?

  

சுப்பிரமணி :

அதென்னா, இப்படிச் சொல்லுகிறீர்கள்? அந்தத் தண்ணீர் உற்பத்தியாகும் இடம் மெத்தையைவிட உயரமான பூமியல்லவா?