பக்கம் எண் :

62ஏழைகள்

பண்டிதர் :

அதெப்படி, முத்திரைப் பாளையம் புதுவையை விட உயரமா?

  

சுப்பிரமணி :

ஆம். நாம் இருப்பது கிழக்குத் தொடர்ச்சி மலையின் சரிவு. முத்திரைப் பாளையம் உயரந்தான்.

  

பண்டிதர் :

என்னடா சுப்பிரமணியா! நாம் மலை மீதா இருக்கிறோம். நாமெல்லாம் குரங்குகளா? எவனிடம் இதெல்லாம் தெரிந்து கொண்டாய்.

  

 

இதற்குள் சுப்பிரமணியனுடைய பாட்டி, ‘நாழிகை யாகிறதப்பா’ என்றாள்.

  

பண்டிதர் :

பிறகு, பேசிக் கொள்ளலாம். நீ போய் வா. (கிழவியும் பையனும் வீட்டுக்குப் புறப்பட்டனர். நடுவழியில் சுப்பிரமணியன் தகப்பனாரும் வந்து விட்டார்)

  

தகப்பனார் :

(கிழவியை நோக்கி. ) என்ன அம்மா, நீங்கள் ஏன் இருளில் வெளிவந்தீர்கள்.

  

கிழவி :

என்னப்பா? உன் மகனை அந்தக் கிழவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க இனிமேல் அனுப்ப வேண்டாம். நம் பையன் என்ன சொன்னாலும் அந்தப் பண்டிதர் கண்டுபிடிக்கவில்லை. மெத்தையில் தண்ணீர்க்குழாய் வைக்க முடியாதென்றுதான் பண்டிதர் இன்னும் நினைக்கிறார்.