பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்63

10
முதலாளி--காரியக்காரன்
கடவுள் விஷயத்தில் ஜாக்கிரதை


முதலாளி, தன் காரியக்காரனிடம் சொல்லுகிறான் : “தேனூர் என்னும் கிராமம். இதற்கு 40 மைலுக்கு அப்பால் இருக்கிறது. அதில் அரைவேலி நன்செய் நிலம் எனக்குச் சொந்தமானது. அதை நீ அனுபவித்துக்கொள். அக்கிராமத்தில் ஏர்-மாடுகள் உண்டு. உழவுக்கு வேண்டிய உபகரணங்களும் இருக்கின்றன. உபயோகித்துக் கொள். அங்கு ஆட்கள் வசதி அதிகம். கிராம மணியக்காரர் உத்தமர்-போலீஸ் காபந்து கிடைக்கும். வயல், முப்போகம் விளையத்தக்கது. ஆற்றுப்பாய்ச்சல் உள்ளது.

நீ தேனூருக்குப் பயணப்படு. பயிரிட்டு நன்றாக வாழ்ந்து கொண்டிரு. கைச்செலவுக்கும் இதோ 100 ரூபாய் கொடுத்தேன். நன்றாய் யோசித்துப்பார். எல்லா வசதியும் உனக்கு ஏற்படுத்தியிருக்கிறேன். புறப்படு என்று சொன்னான்.

காரியக்காரன் நன்றாய் நினைத்து நினைத்துப் பார்த்தான். தேனூருக்குத் தான் போய்ச் சௌக்கியமாகப்