பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்65

பிறகு, அவன் வேலை தொடங்கினான். அடிக்கடி அவன் தனக்கு நிலம்விட்ட முதலாளிக்கு நன்றி செலுத்தியும் தன்னால் தேனூரில் தேடிக்கொள்ளத்தக்க பரிகாரங்களைத் தன் முதலாளியைத் தேடித் தரச் சொல்லியும் கடிதம் எழுதுவதில் அவன் சோர்வடைவதில்லை. சுமார் நூறு முறை இவ்விதக் கடிதம் எழுதியும் பதில் வராதது கண்டும் கடிதம் எழுது வதை நிறுத்தவில்லை. தன்னாலேயே தேனூரில் உண்டாக்கிக் கொள்ளக் கூடிய வசதி-பரிகாரங்களையும் அவன் உண்டாக்கிக் கொள்ளும் சக்தியை நாளடைவில் இழந்தான். நாளடைவில் வாழ்க்கையிலும் ஈனநிலையடைந்தான்.

தம்மையும் உலகத்தையும் படைத்தவர் கடவுள் என்று நினைப்பவர்கள் அக்கடவுளிடம் அவர்கள் தேனூர்க் காரியக்காரன்போல் நடந்துகொள்ளக் கூடாது.

ஏ! முதலாளிக் கடவுளின் காரியக்காரர்களே, உங்கள் கடவுள் உங்கட்குக் கண் கொடுத்தார். கேட்கக் காது கொடுத்தார். மூக்கு, வாய், உடம்பு இவைகளைக் கொடுத்தார். சிந்தை கொடுத்தார். அறிவை அருளினார். இவ்வரிசையில் குறைவு ஒன்றுமில்லை. மற்றும், இத்தனைப்பெரிய உலகைக்கொடுத்தார். அதில் போகப்பொருள்கள் அனைத்தும் அமைத்தார். எல்லா வசதியும் கொடுத்தார். உங்களை நன்றாக வாழச் சொன்னார். இதற்காக நீங்கள் அவருக்கு இடைவிடாமல் நன்றி செலுத்துவதை அவர் எதிர்பார்க்கவேயில்லை. பெருங்கொடை கொடுத்த பெருங்கடவுளை - தினம் உங்கள் நன்றியறிதலை எதிர்பார்க்கும் அற்பத்தனமுள்ள குள்ளக் கடவுளாக்காதீர்கள்! தினமும் கடவுளை நினைக்கும் எளிய மனிதனைவிடக் கடவுள் நினைப்பறியாத மிருக பக்ஷிகள் கம்பீரமாக வாழ்கின்றன!

மேலும், நீங்களே உங்களுக்கு இயல்பாக ஏற்பட்டிருக்கும் வசதிகளின் மூலம் நீக்கிக் கொள்ள வேண்டிய தீமைகட்

ஏ. சி. -5