பக்கம் எண் :

66ஏழைகள்

காகக் கடவுளுக்கு விண்ணப்பம் அனுப்புவதால் என்ன பதில் கிடைக்கும்? நீங்களே தேடிக் கொள்ள வேண்டிய நன்மைகட்குக் கடவுளைக் கோருவதால் ஆவதென்ன? கடவுள் முன்னதாகவே உங்கட்கு எல்லாச் சாதனங்களையும் கொடுத்தது எதற்காக? பிற்பாடு அவர் உங்கள் விண்ணப்பத் தொல்லைகளிலிருந்து நீங்கிக் கொள்ளவன்றோ?

கடவுள் உங்கட்கு விட்ட நிலத்திற்காக உங்களிடம் குத்தகையோ, வாரமோ எதிர்பார்க்கவில்லை. ஆதலால் உங்கள் நிலையைக் கடவுள் மேற்பார்வை பார்க்க எவரையும் எப்போதும் அனுப்புவதில்லை. இதனால் கடவுளின் அவதார புருஷரென்று நீங்கள் ஒருவரையும் நினைக்க வேண்டாம். கடவுள் தூதுவர் என்றும் எவரையும் நம்ப வேண்டாம். உங்கள் போற் பிறந்து, உங்கள் போலவே செத்துப்போகும் எந்த மனிதரையும் இம்மியாவது உயர்த்திப் பேசாதீர்கள். நீங்கள் வசதியுடையவர்கள்-வாழ்வில் உயருங்கள். இந்நிலையில், உங்களிடம் சிலர், நல்ல எண்ணங் கொண்டவர் போலவும்-அறிவுடையவர் போலவும் வந்து உம்மைப் படைத்தவர் கடவுள் என்பார்கள். நீங்கள் சும்மா விருந்தால் அதனிலும் ஒரு படியேறி அந்தக் கடவுளுக்கு நன்றி செலுத்தச் சொல்வார்கள். பிறகு மெதுவாக அந்தக் கடவுள்-அங்கிருந்தபடி-தன் கையால் மனிதருக்குச் சட்டம் எழுதியனுப்பி யிருப்பதாகச் சொல்வார்கள். அந்தச் சட்டத்தில் எளியவன் வலியவனின் காலில் நசுக்க வேண்டும் என்றிருப்பதாகச் சொல்வார்கள். நீங்கள் எளியவரைச் சேர்ந்தவர்கள் என்பார்கள். ஊரார் தாலியையும் அறுத்துத் தம் வயிற்றை நிரப்புகின்றவர்கள் கடவுளுக்குச் சொந்தக்காரர் என்பார்கள். உம்மைப் பாபிகள் என்பார்கள். கூலி கொடுத்தால் புண்ணியராக்கி விடுவோம் என்பார்கள். கடவுள் என்பதில் துவக்கிய இந்தத் தொல்லைகள் வளர்ந்து வளர்ந்து-வீட்டில் அடுக்குப்பானையின் சந்தில் ஓளிந்தி