பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்65

ருக்கும் பெருச்சாளியையும் கடவுள் என்று வணங்கும் நிலையை ஏற்படுத்துவார்கள். உங்கள் சிந்தனையை அந்தப் பெருச்சாளி புகுந்திருக்கும் அடுக்குப்பானையின் குப்பைகளை அகற்றுவதிலும் செலுத்த வழியிராது.

ஆஹா! கடவுள் என்ற வரிசையில் உங்கள் நல்வாழ்வுக்கு, சுதந்தர வாழ்வுக்கு எத்தனைத் தடைகள்? எந்தனை ஆபாசங்கள்! மனிதன் ஆன்ம நிலையை அடைந்து விடுகிறான்.

இந்தக் கடவுள் என்னும் சாம்ராஜ்யத்தில் வேலை செய்துவரும் இலாக்காக்களை-மத இலாக்கா-கோயில் இலாக்கா-மோக்ஷ இலாக்கா-பாபம் தீர்க்கும் இலாக்கா-அவதார இலாக்கா-வேதாந்த இலாக்கா-வான இலாக்கா-பூசுரர் புராண பண்டித இலாக்கா எனப் பலவாகப் பிரிக்கலாம்.

ஒவ்வோர் இலாக்காவாலும் உங்கட்கு ஓர் நன்மையும் இல்லை. இல்லாமல் போயினும் இமைகளில் எந்த இலாக்கா வாகிலும் உங்களைப் பார்த்து, ‘மக்களே, நீங்கள் நாளைக்குச் சாப்பிடுவதற்கு அரிசி வாங்கக் காசு இருக்கிறதா? ஏதாகிலும் குறைவுண்டா?’ என்று கேட்பதுண்டா? அதுதான் கிடையாது. ஒவ்வொர் இலாக்காவும் உங்களைப் பணம் கேட்கும்! உங்கள் இரத்தத்தைக் குடிக்கும்! வறுமை என்னும் சகதியில் உங்களைத் தள்ளும். நீங்கள் செத்துப்போகும்போது இடுகாட்டு நரிபோல் உங்கள் முன் தானையில் ஏதாகிலும் முடிந்து வைத்திருக்கிறீர்களா என்றுதான் கவனிக்கும்.

கடவுளுக்காக வேலைசெய்து அவர்களிடம் பணம் வசூலிக்கும்-இந்த இலாக்காக்கள் அந்தப் பணத்தைக் கடவுளுக்கு அனுப்புவதுண்டா? அனுப்புவதில்லை. ருஜுவேண்டுமா? இதோ, புராணிகர்கள்-இதோ, பண்டாரச்