சந்நிதிகள். இதோ தம்பிரான்கள்! இதோ சங்கராச்சாரிகள்! இதோ ஜீயர்கள்! இதோ பாதிரிகள்! இதோ முல்லாக்கள்! இதோ சந்நியாசிகள்! இதோ மடாதிபதிகள்! இதோ பிராமணோத்தமர்கள்! இவர்கள் அனைவரும் இப்படிக் கொழுத்திருப்பதும் கவலையற்றிருப்பதும் எப்படி? ஆதலின், முதற்கோணல் முற்றும் கோணல் என்றபடி கடவுள் என்றதை ஒப்பியதால் அதன் தொடர்பு இவ்வாறு நீண்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் நலத்தைத் தேடுவார் போலவும் யோக்கியர் போலவும் கடவுள் பெயரை உம்மிடம் வந்து உச்சரிப்பவர்களிடம் நீங்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் ஒன்றிருக்கிறது. கடவுள் என்று சொல்லுவார்கள். கடவுள் இருப்பது உமக்குக் கண்ணெதிரில் தெரிந்தாலும்-‘கடவுள் இல்லை’ போய் வாருங்கள்; என்று ஒரே அடியாய் அடித்து விடுங்கள். |