ரத்தினமுத்து படித்த பெண். சுதந்தர புத்தியுள்ளவள். மிக்க அழகுடையவள். அவள் தன் உயிரை மாய்த்துக் கொள்வதிலிருந்து இந்த நிலையிலிருந்து வருவதற்குக் காரணம் அவள் இரண்டு கேள்விகட்குப் பதில் தேடிக் கொண்டிருப்பதே. என் கணவர் இறந்த பின் மீதியுள்ள என்வாழ் நாள் எனக்குக் கசப்பாக்கப்பட்டிருக்கிறது. இக்கசப்பு தடாகத்திலிருந்து நான் கரையேற மார்க்கம் உண்டா? இல்லையா? ஆனால், ரத்தினமுத்து, தயாராயிருக்கிறாள்! இனிமேல் தான் ஒருவனைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்ற கவலை வேண்டியதில்லை. ரத்தினமுத்தின் இருதயப் பறவை சுதந்திர உணர்ச்சியைச் சிறிது உபயோகப்படுத்தி எங்கேயோ சென்றது. அப்பறவையோடு வேறொரு வீராதி வீர உள்ளமானது அதனுடன் சேர்ந்து கொண்டது. ரத்தின முத்தின் மாடிக்கு அருகில் ஜோஸப் வரக்கூடிய சந்தர்ப்பம் கிடைப்பதுண்டு. இருவரும் தம் தம் பெற்றோரின் எண்ணத்தை முற்றமுடிய அளந்து கொள்ள அவர்கள் நினைத்துப் பிரிவதுண்டு. இது மெய்தான். தமது செய்கையால் முட்டாள் இந்தியாவைத் திருத்த வந்த காதலர். இதில் அவர்கள் மறைவு திறவு வைக்கவில்லை. மனச்சாட்சியுள்ள பெற்றோர், வேண்டுமானால் தம்மைக் கொன்று போடட்டுமே! அந்த வகையால் காதல் பூர்த்தியாகட்டுமே! இதுதான் அவர்கள் உள்ளம். ரத்தினமுத்து வசிக்கும் மாடியிலிருந்து குனிந்து பார்த்தால் அந்த வீட்டுக்குச் சொந்தமான பங்களா ஒன்று தெரியும். அந்த பங்களாவில் தனியாக ஒரு பள்ளியறை! ரத்தினமுத்துவின் தகப்பனார்! ரத்தினமுத்துவின் தாய்! பிள்ளைகள் பாடசாலைக்குப் போயிருந்தார்கள். ரத்தின |