முத்துவின் தாய் தந்தை தனி. மாலை சரியாய் 5 மணி தந்தை தனது கண்ணால் ஒரு சேதி சொன்னார். தாய் குழைந்து போனாள். அவ்விருவரும் யாராவது அங்கிருக்கிறார்களா என்று திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். இல்லை சபாஷ்! இருவரும் தனி! காற்றில்லை! காற்றில்லையென்று காற்றின்மேல் பழிபோட்டு பங்களாவை நாடிச் சென்றார்கள். முதிய காதலர்கள். நல்ல சந்தர்ப்பம்! ஜோசப் மாடியில் ஏறிவிட்டான். ரத்தினமுத்தும் ஜோசப்பும் தனி. முந்திய காதலர் பங்களாவில் கைகள் பிணைந்தனர். காதற் பேச்சுக்கள் தங்கு தடையின்றி வெளிவந்தன. அதிலொன்று : - “நாம் இருவரும் கூன் வளைந்து புருவம் தரையில் தொங்கும்போதுகூட இருவர் தோளும் இணைந்தபடி இருக்க வேண்டும். ” பள்ளியறை கூப்பிடுகிறது! முதிய காதலர் சொந்த நினைவு ஒன்றும் இல்லை. காதல் முறுக்கேறி விட்டது. அந்தோ! அந்தோ! அந்தோ! மாடியில் இளங்களிறும், இளம்பிடியும் (ரத்தினமுத்தும் ஜோசபும்) தமக்கெதிரெதிர், உள்ள காதல் தேன் வெள்ளத்தில் கைவைக்கவும் இல்லை. இவர்களின் இடையில் நின்று மறிப்பது எது? சமூகத்தின் மிருகக் கட்டுப்பாடு! இளம் காதலர் கண்ணீர் விட்டுப் பிரியும் சமயம்! -தாய் தகப்பன் இல்லாமல் ஒரு முத்தமாவது கொடுக்கக் கூடாதா? என்று இரு காதலர் நெஞ்சும் ஒன்றை ஒன்று நோக்கிக் கேட்க ஆரம்பித்தன. விடையும் அதிலேயே இருக்கிறது. உடனே....... பங்களாவில் ரத்தினமுத்தின் தாய் தந்தையர் இன்ப வெறியால் பங்களாப் பள்ளியறையை நோக்கி ஓடினர். ஆனால் அவர்கள் காலடியில் இரண்டு உருவங்கள். அவைகள் கைகோத்தபடி தோன்றின! ரத்தினமுத்தின் தந்தை, தனது காதலியிடம் சொல்லுகிறார் : |