பக்கம் எண் :

72ஏழைகள்

இந்த இரண்டு நிழலைப்பார்! மாடியில் ரத்தினமுத்தும் ஜோசபும் ஆலிங்கனம் நடத்துகிறார்கள்.

உன்மகள் நம் சொல்லைக் கேட்கவேயில்லை..... ஆனால்..... நாம்....அவர்கட்கு....

ரத்தினமுத்தின் தாய் :

இனிமேல் ஜோசப் வராமல் பார்த்துக் கொள்ளுவோம். உள்ளே வாருங்கள்!

  

தந்தை :

நாம் இருவரும் சாகும் வரைக்கும் தோளைப் பின்னியபடி இருக்க எண்ணுகிறோமே! நமது இளம்பெண்ணை நாம் ஏன் மறுக்க வேண்டும்? ஏடி! என் இதயத்தில் பாயும் ஒருவேல் அவளைப் பெற்ற உன் இதயத்தில் பாயாதிருக்கிறதே!

  

தாய் :

அந்தோ! அந்தோ! நான் அப்படிப்பட்டவள் அல்லவே.

இருவரும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ஓ! நாம் பள்ளியறைக்குப் போவோம்! நாம் அவ்விருவருக்கும் அநுமதி தந்து விட்டோம்.

தாய் தனியாக

அடியம்மா ரத்தினமுத்து! மாடியிலா இருக்கிறாய்! நீங்கள் பேச, கீழே இடமில்லையா? இறங்குங்கள்.

இதற்கு விடையாக ஜோசப் :

நீங்கள் எங்கள் மீது இரங்கிவிட்டீர் போலிருக்கிறது.