பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்73

12
சேற்றில் இறைந்த மாணிக்கங்கள்


ஏழை உழத்திகள் வயலில் களை பிடுங்குகிறார்கள். அவர்கள் குழந்தைகள் வயலையடுத்த தரையில் வளர்த்தப்பட்டிருக்கின்றன. சில குழந்தைகள் தத்தி நடந்து விழுந்து புரள்கின்றன.

வயல்களை அடுத்தகரை, மேடு பள்ளமுடையது. சூரிய வெப்பத்தால் கொதிப்பேறியுள்ளது. முட்கள் உள்ளன. பிள்ளைகள் இந்த நெருப்புச் சட்டியில் வறுபடுகின்றன. அந்தப் பிள்ளைகளின் இளங்கன்னங்கள், கருவிழிகள், செவ்வுதடுகள், அழகைக் கொட்டும்முகங்கள், மெல்லிய உடல்கள், சின்னஞ் சிறிய பாதங்கள் ஆகிய இந்தப் பூக்களும் துளிர்களும் கருகி எரிந்துபோவதை எரிக்கும் வெயில்தான் அறியும். பிள்ளைகளின் உடலிற் பாய்ந்த முட்களின் வாயை மண்பொடிகள் அடைத்து விடுவதால் ரத்த ஒழுக்குகள் தெரிய வில்லை. பிள்ளைகளின் அழுகுரல் மாத்திரம் வானில் கேட்பதுண்டு. அடுத்து வேலை செய்யும் தாய்மார்கட்குக் கேட்ப தில்லை. ஏனெனில் அவர்கள் உள்ளமெல்லாம் மாலையில் அலட்சியமாய்த் தம் ஆண்டைமார் சிறிது தானியம் கூலி