யாக அள்ளித்தரும் கையையும் அதைச் சமைத்துத் தின்று பாதிவயிற்றோடு உறங்கப்போகும் தம் பெரிய குடும்பத்தையும் பற்றி யோசித்துக் கொண்டிருக்கின்றன. ஓ! கல்நெஞ்சம் கொண்ட உழத்தியர்களே! பெற்ற பிள்ளைகளை வயற்புறத்தில் சுடுவெய்யிலில் பறக்கவிட்டுக் கவலையின்றித் தலையை நட்டுக் கொண்டு களைபிடுங்கிக் கொண்டிருக்கலாமா? இரக்கமில்லையா? இப்படிப்பட்ட கேள்விகளை அந்த உழத்தியர்களை நோக்கி இதுவரைக்கும் ஒருவரும் கேட்டதில்லை. அந்த உழத்தியர் வளர்ந்ததும் இப்படித்தானே என்று அந்த உழத்தியர் நினைத்து நினைத்துப் பழகிப்போய் விட்டார்கள். வேலை நடந்து கொண்டிருந்தது. பிள்ளைகள் அழுது கொண்டிருந்தன. வயலுழத்தியரையும், பிள்ளைகளையும் படுத்திய தொல்லை போதுமென்று சூரியன் மேற்கு நோக்கினான். மாட்டுக்காரச் சிறுவர்கள் தாம் வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் ஆனது கண்டு பாடிய உற்சாகப்பாட்டு வானத்தில் ஏறி, சூரியனைத் துரத்தியடித்தது. மணி மாலை 6லு ஆயிற்று. உழத்தியர்கள் தாங்கள் மூச்சு விடுவதற்குத் தங்கள் ஆண்டைகளை உத்தரவு கேட்டார்கள். ஆண்டைமார்களும் வேலையை நிறுத்திக் கூலி பெற்றுக்கொள்ள உத்தரவு அருளினார்கள். அதன் பிறகு வயல் வெளிகளில் எல்லா ஏழை உழத்திகளும் ஏழை உழவர்களும் தங்கள் பிள்ளைகள் சகிதமும் கூலியாகப் பெற்ற சிறு தானிய முடிச்சுகள் சகிதமும் பசியோடும் களைப்போடும் சேரியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஒரே கூட்டம்! இதனோடு நாள் முழுதும் வயிறாற மேய்ந்து வீட்டுக்கு ஓட்டப்படும் மந்தை மாடுகளும் சேர்ந்து கொண்டன. ஆனால் மாடுகள் அசைவு போட்டபடி மெது |