பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்75

வாய்ச் சந்தோஷமாய் நடந்து போயின. அப்போதுதான் இந்த வர்த்தமானத்திற்குச் சிறிதும் சம்பந்தமே இராத ஓர் கூச்சல் பலமாய்க் கேட்டது. அக்கூச்சல் ஏதோ ஆபத்து வருமுன் செய்யப்படும் எச்சரிக்கைபோல் இருந்தது! இதைக் கேட்ட உழவர்கள் உழத்தியர்களோ எனில் தமது பசி கொண்ட உள்ளத்தோடு கேலிச்சிரிப்பை இரவல் வாங்கிச் சிரித்துக்கொண்டே நடந்தார்கள்.

வேதம்! வேதம்! வேதம்! அனைவரும் சற்று நின்று கேட்டுவிட்டுப் போக வேண்டும். நில்லுங்கள்! நில்லுங்கள்! என்று ஒருவன் கையமர்த்திக் கூச்சலிட்டுக் கொண்டே இருந்தான். அவனண்டையில் இரண்டு ஆட்கள் வேதம் போதிக்க ஆரம்பித்தார்கள். அந்த ரசமான போதனையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மூவரே. அதுவும் வேதம். போதிப்பவர்களைச் சேர்த்தால்தான் வீட்டுக்குப் போய்ப் பசியாற வேண்டும் என்ற அவசியமில்லாத அந்த மாடுகளும் வேதத்தைக் கேட்க நிற்கவில்லை.

இந்தப் பரிசுத்த வசனங்களை அந்த மூடர்களாகிய உழவர் உழத்தியர் நின்று கேட்பதற்குப் பதிலாக அவர்கள் நடந்து கொண்டே கிண்டல் பேசவும் ஆரம்பித்தார்கள்.

அவர்களில் ஒருவன்....தேவன் நமக்காகப் பாடுபட்டார் என்று சொல்லுவதற்காகத்தான் அவர் கள் நம்மை நிற்கும்படி சொன்னார்கள்.

மற்றொருவன்....நாம் காலை முதல் மாலை வரைக்கும் சுடுவெய்யிலில் வருந்தியுழைக்கிறோம். பாதி வயிறு நிரம்புவது சந்தேகம். உழைக்காதவர்கட்கு வயிறு இடங்கொடுத்தால் இந்த உலகத்தையும் விழுங்கிவிடச் சௌகரியம் இருக்கிறது. இந்த இருவகையாரில் தேவன் எவருக்காகப் பாடுபட்டார் என்ற தகவல் தெரியவில்லையே.