பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்77

13
செவ்வாயுலக யாத்திரை


நாங்கள் ஆறு நண்பர்களும் திட்டம் போட்டபடி எங்கள் ஆகாய விமானத்தைச் செவ்வாயுலகத்தை நோக்கி முடுக்கினோம். அது பறந்துபோய்க் குறித்த இடத்தை அடைந்தது.

மனிதர்கள் சிவப்பு நிறமுடையவர்கள் நம்மினும் சிறிது உயரமுடையவர்கள். இந்த இரண்டு அம்சங்கள் தவிர-செவ்வாயுலகத்தவர் எல்லா விஷயத்திலும் நம்மையொத்தவர்களே. ஆனால் அம்மனிதர்களனைவரும் எப்போதும் தங்கள் தலையின்மேல் ஒரு பெரிய கல்லைச் சுமந்தபடி இருந்தார்கள்.

எங்கள் விமானம் செவ்வாயுலகத்தில் ஒரு கிராமத்தின் வயற்புறத்தில் இறங்கிற்று. நாங்கள் முதலிற் பார்த்த ஓர் உழவன் தன் தலையில் ஒரு கல்லைச் சுமந்து கொண்டு நடந்தான். ஏதோ தூக்கிக்கொண்டு போகிறான் என்று நினைத்தோம். சிறிது தூரம் நடந்தான். உழுது கொண்டிருந்த சுமார் பத்துப்பேர்களும் தலையில் கற்சுமை உடையவர்களாய் இருந்தார்கள். அதையும் தாண்டினோம். ஒரிடத்தில் ஒரு விழா நடந்தது. மனிதர்களின் பெருங்கூட்டம். சிறு