பக்கம் எண் :

78ஏழைகள்

குழந்தைகள் முதல் கிழவர் ஈறாகவுள்ள அனைவரும் கல்லைச் சுமந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் சிரித்தால் அது குற்றமாக முடியுமோ என்று எங்கள் உள்ளம் நினைத்ததுண்டு. எனினும் அடக்கமுடியாத சிரிப்பும் நாங்களும் கட்டிப் புரண்டோம். எங்களில் ஒருவர் சாதாரண விஷயத்திற்கே அதிகமாய்ச் சிரிப்பவர். கல்சுமக்கும் மனிதர் கூட்டத்தைப் பார்த்ததும் அவர் விழுந்து விழுந்து சிரித்தார். செவ்வாயுலகப் பெண்ணொருத்தி ஒரு கையில் தன்னாண் குழந்தையைப் பிடித்தபடி மற்றொரு கையில் தலையில் பாராங்கல்லைப் பிடித்தபடி நடந்தாள். குழந்தையின் தலையிலும் ஒரு கருங்கல் இருந்தது. விழாவிற் கலந்துகொள்ள அவள் விரைவாய் நடந்தாள். குழந்தையின் தலைச்சுமை கீழே வீழ்ந்தது. தாய் அதைத் தூக்கி அவசரமாய்ப் பிள்ளையின் தலையில் வைத்தாள். அவசரமாய் நடந்தாள். எங்களில் அதிகமாய்ச் சிரிக்கும் நண்பர் இந்தக்கல்லை எங்கே எடுத்துப் போகிறீர்கள் என்று கேட்டார். அவளுக்கு எங்கள் பாஷை புரியவில்லை. எங்களை மாத்திரம் அவள் கவனித்தாள். உடனே வீதியின் இருபக்கத்திலும் வரிசையாய் வைக்கப்பட்டிருந்த கற்களில் ஒன்றைத் தூக்கி வந்து எங்களில் ஒருவர் தலையில் வைத்தாள். பிறகு, மற்றொரு கல்லை மற்றொரு நண்பர் தலையில்! தடுத்தால் உதைவிழக்கூடுமென்று நாங்களும் பெரிய பெரிய கற்களைத் தலையில் சுமந்து கொண்டோம். எங்கள் தலையில் கல்லைச் சுமத்திய பெண் அதனோடு சென்றுவிடவில்லை. நாங்கள் கறுப்பு நிறமாய் இருப்பதை அவள் உற்றுக் கவனித்தாள். ஓடினாள். தன் இனத்தாரோடு சொன்னாள். எங்களுக்கோ பயம்! செவ்வாயுலகம் சிறிது நேரத்தில் எங்கள் பக்கம் திரும்பிற்று. அவர்கள் எல்லோரும் நாங்கள் கறுப்பு நிறமாயிருப்பதையும், குட்டை வடிவமாயிருப்பதையும் கவனிக்க ஆரம்பித்தார்கள். நாங்கள் எந்தப் பக்கமாக ஒடி எப்படித் தப்பி ஆகாய விமானத்தை அடைந்து செவ்வாயுலகைவிட்டு பறப்பது