பக்கம் எண் :

80ஏழைகள்

முடியவில்லை. ஆனால் நாங்கள் சிரிப்பதுபோல் அவர்கள் இரண்டு பங்கு சிரித்தார்கள். சிரித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் சிரிப்பதற்கு இரண்டு காரணங்கள் சொன்னார்கள். நாங்கள் கல்லைச் சுமக்காமலிருப்பது ஒன்று. கல் சுமப்பவர்களைப் பார்த்து நாங்கள் சிரிப்பது மற்றொன்று. செவ்வாயுலகின் பத்திரிகைகள் எல்லாம் விழுந்து விழுந்து புரண்டு புரண்டும் சிரித்தார்கள். இதற்கிடையில் ஒருநாள் அங்குள்ள கிழங்குகளும் கனிகளும் எங்களுக்கு ஒத்துக் கொள்ளாததால் நாங்கள் இங்கிருந்து கொண்டுபோன அரிசியைச் சமைத்துச் சாப்பிட எண்ணிச் சமைக்க ஆரம்பித்தோம். எங்களில் ஒருவர் பிராம்மணர். அவர் சமையல் பண்ணத் தனியிடத்தில் மறைப்புத்திரை கட்டினார். மற்றொருவர் வேளாளர். அவர் ஒரு பக்கம் மறைவாகச் சமைத்தார். முகமதியர் ஒருவர்-அவர் ஒருபுறம் சமையல்’ கிறிஸ்தவர் ஒருவர். அவர் ஒரு புறம். நாயுடு ஒருவர் அவர் மற்றொரு புறம். இன்னொருவர் ஆதிதிராவிடர். அவர் ஒரு புறம் அனைவரும் சமையல்களை முடித்துவிட்டோம். ஒரு பிராமணர், சைவர், நாயுடு மூவரும் வாழையிலையைத் தேடிக்கொண்டு வெளியிற் சென்றோம். மற்றவர் உண்கலங்களை மண்கொண்டு துலக்கிக் கொண்டிருந்தார்கள். அங்குள்ள ஓர் வீட்டு மிருகம் குணத்தில் பூனையையும், உருவத்தில் குரங்கையும் பருமனில் ஒரு பலாப்பழத்தையும் ஒத்தது. அது ஆதிதிராவிடர் சமைத்து வைத்திருந்த சோற்றை பாத்திரத்தோடு தூக்கிப்போய்ப் பிராம்மணர் சமையலோடு வைத்து விட்டது. பிராம்மணர் வைத்திருந்த ரசத்தை மாத்திரம் கிறிஸ்தவர் சமையலுடன் கொண்டுபோய் வைத்தது. பிராம்மணர் வந்து பார்த்தார். இங்கு வந்தும் பறையன் தன் போக்கிரித்தனத்தை விடவில்லையா என்றார். ஆதிதிராவிட நண்பர்க்கு இது பொறுக்க முடிய வில்லை. பிராமணர் கன்னம் கிழிந்து போயிற்று, மீதியுள்ள