நாங்கள் இருகட்சியிலும் சேராதிருக்க முடியவில்லை. நடந்தது சண்டை சிரித்தது செவ்வாயுலகு! எம்மைச் சுற்றிலும் செவ்வாயுலக மக்கள். மற்றவரும் எங்கள் கோலத்தைக் காண வந்து கொண்டிருந்தார்கள். இது தெரியாதிருப்பவர்களும் அழைக்கப்பட்டனர். எங்கள் கைச்சண்டை சோர்ந்து போனபின் வாய்ச்சண்டை ஆரம்பித்தது. இந்த இரண்டாவது அத்தியாயம் செவ்வாயுலகத்தைச் சிரிப்புலகமாக்கி விட்டது. இவர்கள் சிரிப்பதற்காக நாங்கள் கோபிப்பதென்றால் எங்கள் சண்டையில் எமக்குள்ள ஊக்கத்தையல்லவா குறைத்துக் கொள்ள வேண்டும்? செவ்வாயுலக மனிதர் சிலர் விலக்கினார்கள். அவர்கள் எம்மை விலக்கா விட்டாலும் அதற்குமேல் நாங்கள் சண்டை போட்டிருக்க முடியாது. கைச்சண்டையாலும், வாய்ச்சண்டையாலும் சோர்ந்து போனோம். பிராம்மணர் கோபமாய்ச் செவ்வாயுலக மக்களைப் பார்த்து, ‘எனக்கு மாத்திரம் ஒரு தனி வீடு கிடைக்குமா?’ என்றார். செவ்வாயுலகினர், ‘ஏன்? என்ன காரணம்?’ என்று விவரமாய்ச் சொல்லும்படி வேண்டினார்கள். நாங்கள் அனைவரும் விபரத்தைச் சொன்னோம். பிராம்மணன் உயர்வு. அவன் கடவுளின் முகத்தில் பிறந்தவன். ஆதிதிராவின் மட்டம். தொட் டால் தீட்டு. இந்த வரிசையில் எங்கள் புராணம், இதிகாசம், சாத்திரங்கள், வேதங்கள், சமயங்கள் எல்லாவற்றையும் சொன்னோம். ஆகக் கூடிக் கடவுள் ஏற்பாடுதானே என்று செவ்வாயுலகினர் கேட்டனர். ‘ஆம், ஆம்’ என்று சொன்னோம் செவ்வாயுலகினர் எங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்கள். எங்கள் கடவுளின் ஏற்பாடு மிக்க நல்லதாயிருக்கிறது. நாங்கள் தலையில் கல்லைத் தூக்கி வைத்துக் கொள்வது மெய். தான். அந்தோ! நீங்கள் உங்கள் தலையில் தூக்கி வைத்துள்ள கற்கள் மிக்க ஆபத்தானவை. சண்டை விளைவிப்பவை. எங்கள் கற்கள் கண்ணுக்குத் தெரிகின்றன. ஆயினும் ஏ. சி. -6 |