பக்கம் எண் :

82ஏழைகள்

நாங்கள் போகுமிடத்திற்கெல்லாம் எம் தலையோடு அக்கற்கள் வருகின்றன. உங்கள் தலையில் நீங்கள் சுமக்கும் கற்கள் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆயினும் அவைகள் உங்களை ஆகாத வழியிலெல்லாம் செலுத்திக் கைகால்களை யெல்லாம் முறியடிக்கின்றன.

மேலும், செவ்வாயுலகினர் எமக்குச் சொல்லியவை : -

ஓ! பூலோகத்தார்களே! உங்கள் தலையில் நீங்கள் சுமந்துள்ள சாதி ஏற்பாடு மத ஏற்பாடு முதலிய கடவுள் ஏற்பாடு என்னும் பாராங்கற்கள் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அச்சுமையால் நீங்கள் சண்டையிட்டுப் பிரிவுபட்டிருக்கிற மாதிரியைப் பார்த்தோம். நாங்கள் இரக்கங் கொள்ளுகிறோம். அக்கண்ணுக்குத் தெரியாத சுமையை இறக்கிவையுங்கள். இறக்கிப் போடாத வரைக்கும் நீங்கள் உங்கள் பூமியையடைவது எப்படி?