14 விகட முழக்கம்
(கிண்டற்காரன்) காந்தி, மான்மியம் உரைத்த அத்தியாயம். வானவரும், தானவரும் சிறப்பித்துக் கூறும் புகையிலையாற் சிறந்த சிவபுரியில் ரூலர் முனிவர் ஜபதபங்களை முடித்துத் தமது சிஷ்ய கோடிகளிடம் வந்து அமர்ந்தார். அப்போது சிஷ்ய கோடிகள் ரூலரின் அடிகளில் தமது முடிதோய வணங்கி அமர்ந்தனர். சிஷ்ய கோடிகளில் ஒருவராகிய பீடிகுமார் சொல்லலானார் ‘ஸ்வாமி! நாங்கள் சிதறும் வண்ணம் இன்று காந்தி மகாத்மீயத்தைத் திருவாய் மலர்ந்தருளுவீர்’ என்று விண்ணப்பிக்க ரூலர் முனிவர் சொல்லத் தொடங்கினார். ‘கேளிர் சிஷ்ய கோடிகளே! இன்று நீங்கள் கோரிய காந்தி மகாத்மீயமானது கேட்போர்க்கு இன்மையில் செல்வம் கீர்த்தி கல்வி அனைத்தும் உண்டாக்கி மறுமையிலும் இன்பத்தைக் கொடுக்க வல்லது. அதைச் சிரவணம் செய்தால் யமவாதை தீர்வதோடு முற்பிறப்பில் செய்த பாவங்களெல்லாம் பற்பொடிபோல் ஆடுவிடும். ரௌரவாதி நரகங்களுக்கும் |