பக்கம் எண் :

84ஏழைகள்

இதைச் சிரவணம் செய்வோருக்கும் சம்பந்தமேயில்லை. இம்மகாத்மீயத்தை முன்னொரு நாளில் ஆயிரம் தலைவாங்கிய அதிசய சிந்தாமணி என்னும் ஒருத்திக்கு ஸ்பென்ஸர் சுருட்டு மகாரிஷி அருளிச்செய்ததால் உடனே பரமசிவன் ஆகாயத்தில் வெள்ளி ரிஷபத்திலிருந்து இறங்கி வந்து உடனே அதிசய சிந்தாமணியைத் தூக்கிக்கொண்டு போய்த் தமது கிருபை டிப்போவிலேயே போட்டு வைத்தார். அப்படிப்பட்ட மகத்துவம் பொருந்திய இதை உமக்கு இன்றைக்குச் சொல்லுகிறேன். ’