பக்கம் எண் :

சிரிக்கிறார்கள்85

15
பழம் நழுவிப் பாலில் விழுந்தது


மாலை ஐந்தரை மணிக்கு மகளிர் கழகம் மகளிரால் நிறைந்தது.

தலைவி தங்கம் சொற்பொழிவு மன்றத்தைத் துவக்கஞ் செய்தாள்.

அஞ்சிலை அறம் இன்னதென்று சொற்பெருக்காற்றினாள்.

மற்றவர் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர். அவர்களின் தாமரைக் கைகள் ஒலி செய்தன.

தலைவி, தங்கம் முடிவுரை சாற்றுங்கால் அஞ்சிலையின் அறவுரை அரிதென்று போற்றினாள். அனைவர் பேராலும் நன்றியும் அறிவித்தாள்.

அதன் பின்னர்,

ஒருபால் மகளிர் சிலர் ஆடல் பயின்றனர்
ஒருபால் மகளிர் சிலர் பாடல் பயின்றனர
கதைகள் பேசிக் களித்தனர் சிற்சிலர்.
வீட்டுக் கதைகள் விளைத்தனர் சிற்சிலர்.