மல்லிகையின் உள்ளம் பிழையாக ஒருமுடிவுக்கு வந்தது-அவனுக்காகத்தான் அங்கயற்கண்ணி காத்திருக்கிறாள் என்று. மல்லிகைக்கு இரக்கம் வந்தது. அவள் தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள். அவன் அழகை அவள் அடையத் தவங்கிடக்கிறாள். ஆதலால் கொடியிடையால் மார்பைச் சுமந்து நின்று வருந்திக் காத்துக் கொண்டிருக்கிறாள். அவன் மேலும் பிழையில்லை. கிடைத்தற்கரிய கிள்ளையை மறக்க வைத்தது அவன் சுமக்கும் தமிழ் இலக்கியமேயாகும். மல்லிகை விர்ரென்று அவன் அண்டையிற்போய் நின்றாள். அப்போது அவன் நிமிர்ந்தானில்லை. ‘உனக்காக உன் காதலி அதோ எந்நேரம் காத்திருப்பாள்?’ என்றாள். கேட்டான். கலவரத்திற் சுழன்ற அவன் உள்ளம் அடுத்த நொடியில் ஏற்றதொரு முடிவைத் தாவிற்று ‘எங்கே?’ என்று திரும்பிப் பார்த்தான். அங்கோர் எழில் ஓவியம் நின்றது. மீண்டும் மல்லிகை சொன்னாள் : ‘உனக்காக உன் காதலி அதோ எந்நேரம் காத்திருப்பாள்' என்று. ஆண்மையும் இளமையும் இலக்கணமும் அதிர்வேட்டோடு தன்னைநோக்கி வருவதை அங்கயற்கண்ணி நோக்கினாள். அங்கே தன் தோழி மல்லிகை தன்னை நோக்கியபடி நின்றபதையும் நோக்கினாள். எனக்காகக் காத்திருப்பார் என் காதலர் என்று அங்கயற்கண்ணி சொன்னதை மல்லிகை மறந்திருக்க மாட்டாள் என்று நினைத்தாள் அங்கயல். ஆணழகு வந்து எதிர்நின்று, ‘எனக்காகக் காத்திருந்தாயா? அப்படியானால் நான் பெற்றது பெரும்பேறு’ என்றவுடன், பெண்ணழகு நாணிக் குனிந்து ஆணழகைக் கடைக் |