பக்கம் எண் :

100

வேறொரு முறை:- பச்சிலையைக் கொண்டு ஒரு நீளக் கோடும்அந்தக் கோட்டில் குறுக்காக அநேக கோடுகளையும் கிழிப்பார்கள். ராமர், லஷ்மணர், சீதையென்று கோடுகளை எண்ணிக் கொண்டு வருவார்கள். ராமர் என்று முடிந்தால் காரியமும் ராமர்தான். சீதையென்று முடிந்தால் வனவாசம். லக்ஷ்மணர் மத்திமம். இதிலொரு விசேஷம் என்னவென்றால் தற்செயலாய்ச் சீதையென்று முடிந்தால் இன்னோரிடம் பல கோடுகள் போட்டுப் பழயபடி ஆரம்பிப்பார்கள். ராமர் என்று முடியும்வரை விடமாட்டார்கள்.

எங்கள் பெண்கள் கணக்கில் நிபுணர்கள். முறம் வாங்கும்போது அந்த முறத்தில் கட்டுகளைத் தொட்டு, கொள்ள, கொடுக்க என்று எண்ணிக் கொண்டே போவார்கள். கொள்ள என்று முடிந்தால் கொள்ளுவார்கள். முறம் பொத்தலாயிருந்தாலும் கவலை இல்லை.

இன்னும் மோர், தயிர், தோசை இவைகள் தினம் தினம் வாங்கியதற்குச் சாணியால் வெள்ளைச் சுவர்களில் அழகாய்ப் புள்ளி போடுவார்கள். இரண்டு மாதத்தில் சுவர்கள் எல்லாம் கணக்கு மயம் ஆகும்.

எங்கள் பெண்கள் தெய்வ நம்பிக்கை யுடையவர்கள். குங்குமம் பூசி வேப்பிலை எடுத்து வரும் அனைவரும் சாபம் கொடுக்கும் சாமிதான் - அடுக்குப்பானை அரிசி சாமிக்குச் சொந்தம். குடுகுடுப்பைக்காரன் அம்மா உனக்கு ஆண்பிள்ளை தங்கம்போல் பிறக்கும் என்றால், பிறந்துவிட்டதாகவே ஒரு நம்பிக்கையேற்பட்டு துணிகள் சம்மானம் நடக்கும். குறி சொல்லுகிறவர்கள் வந்துவிட்டால், தங்கள் வாக்கு மூலத்தைச் சொல்லி, அதையே அவர்கள் திருவாக்கால் கேட்டுப் பணம் கொடுப்பார்கள். மாரியாத்தாளை உத்தரவு கேட்க மாரியாத்தாள் தலையில் பூவைச் சுருட்டி வைத்து அதன்மேல் ஓர் எலுமிச்சம் பழத்தை வைப்பார்கள். அமிழ்த்தி வைத்த பூவானது விரிந்து எலுமிச்சம்பழம் கீழே விழுந்தால் அம்மன் உத்