அந்த ருசியென்பதே வேண்டாதவனுக்கோ வயது வராத குழந்தைகளைக் கலியாணம் செய்து கொடுப்பது எதற்கு? எட்டு வயதிலும், பத்து வயதிலும் கலியாணம் செய்து கொண்ட தாய்மார்களையும், நமது தகப்பன்மார்களையும் அழைத்து எதிர் நிறுத்தி நீங்கள் உண்மைக் கலியாணம் புரிந்த தேதி எது என்று கேட்டால், அவர்கள் பருவம் வந்தபின் முதல் முதல் கருத்தொருமித்து மஞ்சத்தையடைந்த தேதியைத்தான் கலியாண தேதியென்று குறிப்பிடக் கூடும். சிறு குழந்தைகட்குக் கலியாணம் செய்ய வேண்டும். என்பதற்குக் காரணம் காட்ட வரும் சுயநலமுடையவர்கள் தமது உணவுக்குப் பொதுமக்களின் ஈரலைத் தின்னுவதற்கும் காரணம் காட்டக்கூடும். பால்யர்கட்கு ஐயர் மணச்சடங்கு முடித்து அரிசி பருப்பு வாங்கிப் போவது நேற்று: மணவாளர் மணத்தின் பயனை அடைவது இன்னும் நாலாண்டுக்குப் பின் என்றால் ஐயர் அவரசத்துக்காகவே பால்ய மணமா? ஒரு பால்யை கணவனை இழந்தால், மறுமணம் செய்யும் நிலை இயற்கையாகி விட்டால் பெண் பிறந்த தினத்திலிருந்து தினந்தினம் அக்குழந்தைக்குக் கலியாண விளையாட்டு விளையாடுவதை யாரும் தடுக்கப் போவதில்லை. பணத்திமிர் என்று அதை நினைப்பதோடு சரி. ஓர் எலிக் குஞ்சுக்கு மனோதிடன் அதிகமிருக்கட்டும்; ஆயினும் அது தன்னினும் கம்பீரமான உருவமுடைய மற்றொன்றை ஜோலிக்கிழுக்க முடியாது. கம்பீரச் செயல்களை, கம்பிர எண்ணங்களை அநேக திடகாத்திரமுள்ள மக்களிடமே எதிர்பார்க்க முடியும். அத்தகைய பிள்ளைகள் நமது தேசத்திற்கு அவசியம். சிறு பெண்கள் வயிற்றில் கொத்தவரைப் பிஞ்சுகள்தான் தோன்றக் கூடும். பால்ய மணம் தேவை என்பவர்க்கு நமது தேசத்திற்குள் சாஸ்திரிகள் என்றும் பெயர் கிடைக்கிறது. அவர் |