பக்கம் எண் :

105

கட்கு நாகரிக தேசங்களில் தொட்டிலில்தான் இடம் கொடுப்பார்கள்.

பிரமசாரி ஆஸ்ரமம் கடந்து, கிருகஸ்தாஸ்ரமத்தில் நுழையும் பால்ய வதூவரர்களுக்கு ஏற்பட்ட சாஸ்திரங்களில் அந்த இளங் குழந்தைகட்கு இன்ன பொம்மை வாங்கிக் கொடுப்பதென்று சொல்லவில்லையே.

ஒரு பெட்டை நாய்க்குக் கசாய்க்கடையே சொந்தமாகி விடுவதாயிருந்தாலும் தனது குட்டியை பிரியாது உயிர் வருக்கத்தில் சிரேஷ்டமாகிய மனிதர்களில், சிலர் மட்டும், வினவறியாத தமது குழந்தையைக் காசுக்கு மற்றவரிடம் விற்றுவிடச் சம்மதிக்கிறார்கள்.

மக்களுக்கு ஏற்படும் இடையூறுகட்கும் சாஸ்திர சம்மதம் என்று சாக்குபோக்கு சொல்லும் துன்மார்க்கன் தனது சாஸ்திரத்திற்கே கெட்டபெயர் உண்டாக்குகிறான். பால்ய மணம் சமூகத்திற்கு ஏற்பட்ட இடையூறு.

பெற்றோருலகமானது பிள்ளையுலகத்திற்கு ஆனமட்டும் உதவி செய்து பிறகு பால்ய விவாகம் செய்து முடிப்பதானது தீனிபோட்டுத் தலைவெட்டும் ஆட்டுக்குடையவன் செயலாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வந்த நாட்டுத் தீமைகளில் பால்ய விவாகம் என்பது சிறந்த தீமையாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அதைப் பாதுகாக்க வேண்டும் என்பது சிலர் கருத்து.

ஒரு சிறுமியும், அவளுடைய விளையாட்டுப் புத்தி, சித்திரம், தையல், பக்ஷணம் முதலியவற்றின்மேல் அவளுக்கு ஏற்படும் அபிலாஷைகளும், ஆறும் அதன் நீரோட்டமுமாகும். அதே சிறுமியும், அச்சிறுமியைப் பற்றிய கலியாணப் பேச்சு, பரியம், பணக்காரனை இழுத்தல் முதலிய சூழ்ச்சிகளுமோவெனில் ஆறும் அதனுட்புறமுள்ள சூழல்களும் பாறைகளுமாகும்.

ஒரு குழந்தை தன் புருஷனை இழந்தபின் அழவில்லை என்பது மெய்தான். ஒரு மனிதன் செத்துப்