பக்கம் எண் :

106

போனபின் தான் செத்து விட்டதற்காக அழவில்லை என்பதும் மெய்தான். இதையெல்லாம் நினைத்து இளம்பெண் புருஷனை இழப்பதிலும் மனிதன் உயிரிழப்பதிலும் அவர்கட்குச் சம்மதம் என்று இச்சமூகம் முடிவு கட்டியதோ என்னவோ?

வயது வந்தபின் கலியாணம் செய்வதென்பது மத விரோதம். ‘மதத்துக்காக நாங்கள் உயிரை விடுவோம்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். செத்தபின், மதத்தால் தமக்குள்ள சவுகரியங்களை அனுபவிக்க மீண்டும் உயிர்பெற்றெழ முடியுமானால், அந்தோ பாவம்! இந்நேரம் அவர்கள் உயிர்விட்டுத்தான் இருப்பார்கள்.

ஒன்றை உறுதியாகப் பிடிக்க எண்ணுவது நல்லதுதான். எண்ணுவதைவிட எண்ணியதுபோல் தமது பத்து விரல் நகங்களும் ஆழப்பதியும்படி பிடிப்பது மிக்க நல்லதுதான். எப்படிப்பட்ட இடையூறுகட்கும் அஞ்சாமல் பிடிப்பது அசல் வீரத்தனந்தான். இயற்கை முறையில் மலராத அரும்பை மணக்கோலம் செய்யலாகாது என்ற சாதாரண அறிவையும் உண்டு பண்ணாத - ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னும் உண்டுபண்ணாத - மதத்தைப் பிடியாகப் பிடிப்பதில்தானா இத்தனை குரங்குத்தனம்?

‘ஒருவன் வீட்டுப் பெண்ணை வயதறியுமுன் இன்னொருவன் மணப்பதில் அப்பெண்ணின் கற்பு விஷயத்தில் சந்தேகம் ஏற்படாது’ என்பவரைப் பார்த்து நான் சில கேள்விகள் கேட்கிறேன்.

ஏன், காணும் குழந்தையை மணக்க வந்த மாப்பிள்ளையே! அந்தக் குழந்தையை நீர் மணந்தபின் நீர் அக் குழந்தையைப் பலாத்காரம் செய்யமாட்டீர் என்பதற்கும் நீர் ஓர் பேடியல்ல என்பதற்கும் உத்தரவாதம் யார்? சாத்திரமா உத்திரவாதம்? உமது தந்தை தாய் பெண்ணின் தந்தை தாய்மார்களா உத்திரவாதம்? இரண்டு வருடத்தில் கிழிந்து போகக்கூடிய சேலை