பக்கம் எண் :

109

26
மனிதன் மனிதனுக்குச் சொன்னவை


“இந்தியாவில் 3000 கடவுள்கள் இருப்பதாக சொல்லுகிறார்கள். ஏற்கெனவே அதிகமாய் இருக்கின்ற இந்திய கடவுள் மார்க்கட்டில் கிறிஸ்துவ மிஷினரிகள் 3001வது கடவுளையும் சேர்த்துவிட்டார்கள்.”

- பிரிதின்கர்

“மதத்திற்கும், நல்லொழுக்கத்திற்கும் ஏதும் சம்பந்தமில்லை. 1913-ம் வருஷம் இங்கிலாந்து உள்நாட்டுச் சர்க்கார் சபையில் எடுக்கப்பட்ட மத கணிதத்தின்படி 18225 கைதிகளுக்குள் 101 பேர்களே மதத்தில் நம்பிக்கையில்லாதவர்களாகும்.

- எச். பி. போனர்

“30 வருஷமாக நான் கத்தோலிக் பாதிரி என்ற ஹோதாவில் ஜனங்களுக்குச் சிறிதும் பிரயோஜனப் படாததும் என் அறிவுக்கு முரண்பட்டதுமான கத்தோலிக் மதத்தை போதித்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன்”

- ஜீன் மெஸ்லியர்

“கிறிஸ்துவ மதத்தின் முழுத்தத்துவமும் பழிக்குப்பழி என்னும் கொள்கை மீது கட்டப்பட்டிருக்கிறது. அது நீங்கிவிட்டால் ‘கிறிஸ்து மதம் தானாகவே விழுந்து விடும்.”

- ப்ரட்லா